• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-30 17:15:22    
சீன-ஐரோப்பிய தலைவர்களின் 12வது சந்திப்பு

cri

சீன-ஐரோப்பிய தலைவர்களின் 12வது சந்திப்பு, 30ம் நாள் சீனாவின் சியாங்சூ மாநிலத்தின் நான்ஜிங் நகரில் நடைபெற்றது. சீன-ஐரோப்பிய உறவு, சர்வதேச நிதி நெருக்கடி, காலநிலை மாற்றம் முதலிய பிரச்சினைகளை இரு தரப்பு முக்கியமாக விவாதித்தது. முடிவில், அறிவியல் தொழில் நுட்பம், பொருளாதார வர்த்தகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தொழிற்துறை உள்ளிட்ட துறைகளின் ஒத்துழைப்பு ஆவனங்களில் கையொப்பமிட்டன.

கடந்த சில ஆண்டுகளில், சீன-ஐரோப்பிய உறவின் வளர்ச்சியை, சீனத் தலைமையமைச்சர் வென்சியாபாவ் வெகுவாக பாராட்டினார். இரு தரப்பும், கருத்தொற்றுமையை விரிவாக்கி, பல்வேறு துறைகளில் தொடர்பையும் ஒத்துழைப்பையும் ஆழமாக்க வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார். அவர் கூறியதாவது:

சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும், பாகுபாடு, எதிர்ப்பு மற்றும் தடை நடவடிக்கைகளை உறுதியாக கைவிட்டு, சமநிலை, பேச்சுவார்த்தை, ஒத்துழைப்பு ஆகியவற்றைக் கொண்டு, உத்தி நோக்குடன் ஒன்றுக்கொன்று நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். வளர்ச்சியை முதன்மை கடமையாக கொண்டு, இரு தரப்பு நலன் தந்து கூட்டு வளர்ச்சியடையும் பாதையை உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் பரோசோ பேசுகையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டு முன்னேற்றப் போக்கை விரைவுபடுத்தும் லிஸ்பென் ஒப்பந்தம் டிசம்பர் முதல் நாள் தொடக்கம், அதிகாரப்பூர்வமாகச் செயல்படுகிறது. இது, இரு தரப்புறவின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வ காரணியை கொண்டு வரும் என்று தெரிவித்தார். அவர் கூறியதாவது:

இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி, ஐரோப்பிய ஒன்றித்துக்கும் சீனாவுக்குமிடையே பன்முக உத்திநோக்கு கூட்டாளி உறவை வளர்க்க விரும்புகின்றேன். பல துறைகளில், இரு தரப்புக்கும் அதிகமான உள்ளாற்றல் காணப்படுகிறது என்று அவர் கூறினார்.

காலநிலை மாற்றம் பற்றிய விவாதம், இச்சந்திப்பில் மற்றொரு முக்கிய பிரச்சினையாகும். பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றக் குறைப்பு பற்றிய சீனாவின் இலக்கை, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை பதவி வகிக்கும் நாடான ஸ்வீடனின் தலைமையமைச்சர் Reinfeldt பாராட்டினார். சீனாவின் பங்கெடுப்பு இல்லை விட்டால், சர்வதேச சமூகம் காலநிலை மாற்ற பிரச்சினையை முழுமையாக சமாளிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

தவிர, சீனத் தலைமையமைச்சர் வென்சியாபாவ் பேசுகையில், ரென்மின்பி மாற்று விகித்தத்தின் நிதானத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டுமென வலியுறுத்தினார்.

இச்சந்திப்புக்குப் பின் நடைபெற்ற கூட்டறிக்கையில், சீனாவின் அமைதியான வளர்ச்சியை ஆதரித்து, சீனாவின் இறையாண்மை மற்றும் உரிமை பிரதேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு மதிப்பளித்து, ஒரே சீனா என்ற கொள்கையை உறுதிப்படுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்தது. இரு தரப்பும் ஒன்றுக்கொன்று நம்பிக்கையை அதிகரித்து, ஒத்துழைப்பை வலுப்படுத்தி, அறைகூவல்களைக் கூட்டாக சமாளிப்பதற்கு, இந்தச் சந்திப்பு துணைபுரியும் என்று இருதரப்பின் தலைவர்களும் தெரிவித்தனர்.