காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் சீனாவின் பங்கெடுப்பு இல்லை என்றால், சர்வதேசச் சமூகம் முழுமையாக செய்லபட முடியாது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் நடப்பு தலைவர் பதவி வகிக்கும் நாடான ஸ்வீடனின் தலைமையமைச்சர் பிரத்ரிக் ரேன்ஃபெல்ட்த் தெரிவித்தார். தவிர, பசுங்கூட வாயு வெளியேற்றத்தைக் குறைக்க, கிழக்கு சீனாவிலுள்ள நன்ஜிங் நகரம் அண்மையில் வகுத்த இலக்குகளையும், அவர் உயர்வாக பாராட்டினார்.
சீனாவின் ஒவ்வொரு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் கரியமில வாயு வெளியேற்றம், 2020ம் ஆண்டுக்குள் 2005ம் ஆண்டில் இருந்ததை விட 40 முதல் 45 விழுக்காடு வரை குறைய, சீன அரசு கடந்த வாரத்தில் தீர்மானித்தது. 130கோடி மக்கள் தொகையை கொள்ளும் நாடு இத்தகைய இலக்கை வகுப்பது, உலகிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று ரென்ஃபெல்ட்த் கூறினார்.
சீன-ஐரோப்பிய வர்த்தக ஒத்துழைப்பு பற்றி குறிப்பிடுகையில், ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவும் இணைந்து ஒத்துழைத்து, சந்தையின் திறப்பை உத்தரவாதம் செய்து, வர்த்தக பாதுகாப்புவாதத்தை கூட்டாக எதிர்க்க வேண்டும் என்று ரேன்ஃபெல்ட்த் வலியுறுத்தினார்.
|