• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-12-01 15:21:53    
எய்ட்ஸ் நோய் தடுப்பு

cri

டிசம்பர் முதல் நாள், உலக எய்ட்ஸ் நாளாகும். இதை முன்னிட்டு, யுனேஸ்கோவின் தலைமை இயக்குநர் ஐரினா பொகோவா அம்மையார் பேசுகையில், மனித குலம், எய்ட்ஸ் நோய் எதிர்ப்பில் மாபெரும் முன்னேற்றமடைந்த போதிலும், இந்நோய் நச்சுயிரி பரவல் உலக அளவிலான அறைகூவலாக இருக்கிறது என்று தெரிவித்தார். மேலதிகமான எய்ட்ஸ் நோயாளிகள் சிகிச்சை பெற முயற்சிகளைப் பெருக்குமாறு சர்வதேச சமூகத்திற்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

சர்வதேச நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியின் பாதிப்பின் பின்னணியிலும், கடந்த சில ஆண்டுகளில் எய்ட்ஸ் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சையில் பெற்றுள்ள சாதனைகளை உத்தரவாதம் செய்ய, மேலும் அதிகமாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஐரினா பொகோவா அம்மையார் வலியுறுத்தினார்.