சீன அரசுத் தலைவர் வென்ச்சியாபாவ் டென்மார்க் தலைமையமைச்சர் லார்ஸ் லோகெ ராஸ்முசேனுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, காலநிலை மாற்றம் பற்றி கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.
கோபன்ஹேகன் மாநாட்டை ஏற்பாடு செய்ய டென்மார்க் மேற்கொண்ட முயற்சிகளை, வென்ச்சியாபாவ் உயர்வாக பாராட்டினார். தொடர்புடைய பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமான முன்னேற்றம் பெற்று, இறுதியில் வெற்றிகளை பெறுவதற்கான அடிப்படையை உருவாக்க வேண்டும். இதற்காக, டென்மார்க்குடன் கூட்டாக முயற்சிகளை செய்ய சீனா விரும்புகிறது என்று வென்ச்சியாபாவ் கூறினார்.
கோபன்ஹேகன் மாநாட்டில் பெறப்படும் சாதனைகள், "பாலி நெறிவரைத் திட்டம்" மற்றும் "சர்வதேச அளவில் பொதுவான ஆனால் வேறுபட்ட பொறுப்பு என்ற கோட்பாட்டின்" அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டுமென ராஸ்முசேன் கருத்து தெரிவித்தார்.
|