• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2010-01-04 17:41:07    
வட சீனாவில் நடுங்கவைக்கும் பனி அலை

cri
புத்தாண்டின் துவக்கத்தில், பெய்சிங் உள்ளிட்ட சீனாவின் வட பகுதியில் கடும் அளவில் பனி பெய்தது. இதனால் நகரங்களின் இயல்பு வாழ்க்கையும், போக்குவரத்து வசதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பொது மக்களின் உற்பத்தி மற்றும் வாழ்க்கை ஒழுங்கை உத்தரவாதம் செய்யும் பொருட்டு, அரசு வாரியங்கள், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
ஜனவரி தி்ங்கள் 2ஆம் நாளிரவு முதல் 3ஆம் நாள் விடியற்காலை வரை, பெய்சிங், தியென் சின், உள் மங்கோலியா,
Shan Xi, He Bei உள்ளிட்ட பிரதேசங்களில் அதிக பனி பெய்தது. பல இடங்களில், பனி பகலிரும், இரவிலும் தொடர்ந்தது. நேற்று பெய்சிங் மற்றும் தியென் சின்னில் பனி பெய்த அளவு, 1951ஆம் ஆண்டுக்கு பின் ஜனவரி திங்களின் அதிக அளவு பனி பெய்த ஆண்டு இவ்வாண்டே என்று வானிலை நிபுணர் ஒருவர் கூறினார்.
நகரங்களின் இயல்பு வாழ்க்கை, போக்குவரத்து வசதிகளின் பாதுகாப்பு முதலியவற்றின் நியாயமான ஒழுங்கினை உத்தரவாதம் செய்யும் பொருட்டு, பல்வேறு அரசு வாரியங்கள் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு உடனடியாக செயல்பட வேண்டும் என்று சீனத் தலைமை அமைச்சர் வென் சியாபாவ் கோரி்க்கை விடுத்தார்.
2ஆம் நாளிரவு முதல், பெய்சிங், தியென் சின் உள்ளிட்ட வட சீனாவின் நகரங்களில், போக்குவரத்துக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் பொருட்டு, மக்களால் பனி அகற்றுவது உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பெய்சிங் மாநகர Hai Dian மாவட்டத்தின் துப்புரவுத் தொழிலாளர் Tian Xiang Dong கூறியதாவது:
"எங்கள் அணியில், சுமார் 570 தொழிலாளர்கள் ஒரு பகலும், இரண்டு இரவும் துப்புரவு பணியில் தொடர்ந்து ஈடுபட்டோம். இரண்டு மணி நேர ஒய்வு பெற்ற பின், இன்று காலை ஆறு மணிக்கு மீண்டும் துப்புரவுப் பணியைத் துவக்கினோம். கைகளால் சிறு கருவிகளை கொண்டும், பனி அகற்றும் வண்டியாலும் தரையிலுள்ள பனியை நீக்கினோம்" என்றார், அவர்.
பெய்சிங், He Bei உள்ளிட்ட, கடும் பனி பொழிவால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில், 3 ஆயிரம் பனி நீக்க சாதனங்களும், 15 ஆயிரம் தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளன. 10 டன் எடையுடைய பனியை உருகச் செய்யும் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. நடவடிக்கைகள் உடனடியாகவும், பயன்தரும் முறையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், பெய்சிங், தியென் சிங் உள்ளிட்ட நகரங்களில், சாலை போக்குவரத்து இயல்பாக உள்ளது. தற்போது, பெய்சிங், தியென் சிங் ஆகிய நகரங்களில், பனி பெய்வது நின்று விட்டது. சீன மத்திய வானிலை நிலையத்தின் முதன்மை வானிலை அறிவிப்பாளர் Sun Jun இன்று எமது செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
"இன்று Shan Dong தீபகற்பத்தின் சில பகுதிகளில் பனி பெய்ததைத் தவிர, இதர இடங்களில் பனி பெய்வது நின்று விட்டது. ஆனால், உறைய வைக்கும் குளிர் காற்றின் பாதிப்பு முடிவுக்கு வரவில்லை. பனிக்கு பின், சீனாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளிலும், யாங் சி ஆற்றின் நடுப்பகுதி மற்றும் கீழ் பகுதிகளிலும் வெப்பம் பெரிதும் குறையக்கூடும்" என்றார், அவர்.
பொது மக்களின் வாழ்க்கை ஒழுங்கிற்கு உத்தரவாதம் அளிக்கும் பொருட்டு, சீனாவின் பல்வேறு பிரதேசத்தின் தொடர்புடை வாரியங்கள் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு விரைவாக செயல்பட்டு வருகின்றன.