அவசர நிலைமை வந்தால், புதிய அரசியல் அமைப்புச் சட்டம் பற்றிய பொது மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படாது என்று கிர்கிஸ்தானின் தற்காலிக அரசு 17ம் நாள் தெரிவித்தது. திட்டப்படி, ஜுன் 27ம் நாள், பொது மக்கள் வாக்கெடுப்பு நடைபெறுவது, தற்போதைய நேரத்தில் மிக சரியாகும் என்று ஐ.நா. தலைமை செயலரின் செய்திதொடர்ப்பாளர் அமீரா ஹாக் அம்மையார் 16ம் நாள் கூறினார்.
கிர்கிஸ்தானில் நடந்த கலவரத்தால், 4 இலட்சம் பொது மக்கள், தங்கள் சொந்த இடங்களிலிருந்து வெளியேறியுள்ளனர். அவர்களில் ஒரு இலட்சம் பேர், பக்கத்து நாடான உஸ்பெக்கிஸ்தானில் அகதிகளாகியுள்ளனர் என்று ஐ.நா. மனித நேய விவகார ஒருங்கிணைப்பு அலுவலகம் 17ம் நாள் கூறியது.
இது வரை, கிர்கிஸ்தான் தென்பகுதியில் சீன மக்கள் காயமடைந்தாகவோ உயிரிழந்ததாகவோ செய்திகள் எதுவுமில்லை என்று கிர்கிஸ்தானிலுள்ள சீன தூதர் வாங் கேய் வேன் 17ம் நாள் கூறினார்.
|