• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-10-29 17:56:22    
வங்கி சேமிப்பு வட்டி விகித அதிகரிப்பு

cri
மத்திய வங்கியான சீன மக்கள் வங்கி 28ம் நாள் அறிவித்த படி 29ம் நாள் முதல் ரெமின்பி வங்கி சேமிப்பு வட்டி மற்றும் கடன் வழங்கும் விகிதம் உயர்த்தப்படும். இவற்றில் ஓராண்டு கால நிலையான வைப்பு தொகை மற்றும் கடன் வழங்கும் விகிதம் சராசரியாக 0.27 விழுக்காடு அதிகரிக்கும். மற்ற நிலையான வைப்பு தொகையின் வட்டி மற்றும் கடன் வழங்கும் வட்டி விகிதமும் உரிய முறையில் சரிபடுத்தப்படும்.
அண்மை காலத்தில் ஒட்டுமொத்த பொருளாதார சரிப்படுத்தலில் பெற்ற சாதனையை வலுப்படுத்துவதற்காக சீனா வட்டி விகிதாசாரத்தை உயர்த்தியுள்ளது. இதன் மூலம் பொருளாதார பயனை அதிகரித்து தேசிய பொருளாதாரத்தின் தொடர்ச்சியான விரைவான இசைவான சீரான வளர்ச்சி போக்கை நிலைநிறுத்துவதற்கு இது உறு துணை புரியும் என்று மத்திய வங்கியின் தொடர்புடைய பொறுப்பாலர் ஒருவர் தெரிவித்தார்.
1995ம் ஆண்டு ஜுலை திங்கள் முதல் சீனா வட்டி விகிதத்தை உயர்த்துவது இதுவே முதல் முறையாகும் என தெரியவருகின்றது.