• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-10-29 21:36:44    
ஹு சிந்தாவ்-சியோட்டுரி குசெயின் சந்திப்பு

cri

பாக்கிஸ்தானுடன் இணைந்து, உயிராற்றலுடைய, முழுமையான சீன-பாக்கிஸ்தான் பன்முக ஒத்துழைப்பு கூட்டாளியுறவை வளர்ச்சியுறச்செய்வதற்கு சளையாத முயற்சி மேற்கொள்ள சீனா விரும்புவதாக சீன அரசு தலைவர் ஹு சிந்தாவ் தெரிவித்தார். 29ந் நாள் பெய்ஜிங்கில் பாக்கிஸ்தான் தேசிய பேரவைத் தலைவர் சியோட்டுரி குசெயினைச் சந்தித்துரையாடிய போது அவர் இதைத் தெரிவித்தார்.

சீன-பாக்கிஸ்தான் சுமுக அண்டை நாட்டு நட்புறவு மற்றும் ஒத்துழைப்புறவை வலுப்படுத்தி, வளர்ச்சியுறச்செய்வது என்பது சீனா உறுதியாக கடைப்பிடிக்கும் கோட்பாடாகும் என்று ஹு சிந்தாவ் தெரிவித்தார்.

சீனப் பொறியியலாளர் கடத்திச்செல்லப்பட்ட நிகழ்ச்சியை பற்றி, அவர்களைக் காப்பாற்றி, இந்நிகழ்ச்சியுடன் தொடர்புடைய பணியை கையாளும் பொருட்டு, பாக்கிஸ்தான் மேற்கொண்ட முயற்சிக்கு சீன அரசு நன்றி தெரிவிப்பதாக ஹு சிந்தாவ் தெரிவித்தார். பாக்கிஸ்தானிலான சீன மக்களின் பாதுகாப்பில் சீனா கவனம் அளித்து, அவர்களின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும் பொருட்டு, பயன்மிக்க நடவடிக்கையை பாக்கிஸ்தான் மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

புதிய காலக் கட்டத்தில், இரு நாட்டு பாரம்பரிய சுமுக அண்டை நாட்டு நட்புறவு மற்றும் ஒத்துழைப்புறவு மேலும் வளர்ச்சியுறும் என்று நம்புவதாக குசெயின் தெரிவித்தார்.

அன்று சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தலைவர் சியா சிங்லினும் சியோட்டுரி குசெயினைச் சந்தித்துரையாடினார்.