• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-02 16:55:05    
ஹாங்காங் அரசியல் அமைப்புமுறை

cri
அரசியல் அமைப்புமுறையின் வளர்ச்சி பற்றி ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசு, “பொது மக்கள் வாக்களிப்பு” என்ற வழிமுறையைக் கடைப்பிடிப்பதில்லை. “பொது மக்கள் வாக்களிப்பில்” கலந்து கொள்ளுமாறு நகரவாசிகளை அணிதிரட்டுவது பற்றிய எந்த நிறுவனத்தின் முன்மொழிவையும் ஆதரிக்காது என்று ஹாங்காங் சிறப்பு நிர்வாகப்பிரதேச நிர்வாக அதிகாரி து ஜியே வாங் நேற்று கூறினார். ஹாங்காங்கின் சட்டமியற்றல் அவையின் உறுப்பினர் சிலரைச் சந்தித்துரையாடிய பின் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 2007-2008 தேர்தல் தொடர்பான மாற்றம் எதனையும் அடிப்படை சட்டம் தெளிவாக வகுத்துள்ளது. சட்டமியற்றல் அவையின் மூன்றில் இரண்டு பகுதியினரின் ஒப்புதல், நிர்வாக அதிகாரியின் உடன்பாடு, மற்றும் தேசிய மக்கள் பேரவை நிரந்தரக்கமிட்டியின் ஏற்றுக்கொள்ளுதலை இம்மாற்றம் பெற வேண்டும். இவ்வாண்டின் ஏப்ரல் திங்களில் நிரந்தரக்கமிட்டி, தேர்தல்முறை குறித்து முடிவு மேற்கொண்டுள்ளது என்று து ஜியே வாங் குறிப்பிட்டார். தேசிய மக்கள் பேரவை, நாட்டின் உச்ச அதிகார நிறுவனமாகும். அதன் முடிவு, கடைப்பிடிக்கப்படவும் செயல்படுத்தப்படவும் வேண்டும் என்றார் அவர்.