• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-02 17:39:17    
சீன ஆசியான் பொருட்காட்சி

cri
சீனாவின் குவாங் சி சுவாங் இன தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகரான நான்நிங்கில் நடைபெறும் முதலாவது சீன ஆசியான் பொருட்காட்சியில், கம்போடிய தலைமை அமைச்சர் ஹுன்சென், லாவோஸ் தலைமை அமைச்சர் போங்நான் உள்ளிட்ட சுமார் 50 விழுக்காட்டு ஆசியான் அங்க நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்று சீன வணிகத் துறை செய்தித்தொடர்பாளர் சுங் சுவான் இன்று நான்நிங்கில் தெரிவித்தார்.
சீன ஆசியான் பங்முக பொருளாதார ஒத்துழைப்பு பற்றிய கட்டுக்கோப்பு உடன்படிக்கையைச் சுற்றி வளைந்து, சுதந்திர வர்த்தக மண்டலத்துக்குள்ளான பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பை முக்கியமாகக் கொண்டு, சீன ஆசியான்  பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பை ஆழமாக்குவது என்பது இப்பொருட்காட்சியின் நோக்கமாகும் என்று சுங் சுவான் கூறினார். புள்ளிவிபரங்களின் படி, ஆசியான், சீனா மற்றும் மற்ற நாடுகளிலிருந்து வந்த 1500 தொழில் நிறுவனங்கள் காட்சியில் பங்கு எடுத்துள்ளன. இத்தொழில் நிறுவனங்கள் பொருட்காட்சிக்கு வைக்க அனுப்பிய வணிகப் பொருட்கள், இயந்திரம், வீட்டுப் பயன்பாட்டு மீன் சாதனம், கார், மருத்துவ மருந்து முதலியவற்றுடன் தொடர்புடையவை.