தகவல்மயமாக்கமும் தொழிற்துறைமயமாக்கமும் என்ற தலைப்பில், 6வது ஷாங்காய் சர்வதேச தொழிற்துறை பொருட்காட்சி 4ந் நாள் ஷாங்காய் மாநகரில் துவங்கியது.
இத்தொழிற்துறை பொருட்காட்சியில் சுமார் 1300 தொழில் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. காட்சிக்கு வைக்கப்பட்ட பொருட்கள் உலக முன்னேறிய நிலையை அடைக்கின்றன. சில பொருட்களின் தொழில் நுட்பம் உலகின் முதல் நிலையை எட்டியுள்ளது. இது மட்டுமல்ல அவை முதன்முறையாக சீனாவின் காட்சிக்கு வைக்கப்படுகின்றது. சீனாவின் பாரம்பரிய தொழிற்துறை, உலக தொழிற்துறையுடன் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் மேற்கொள்ளும் மேடையாக இப்பொருட்காட்சி மாறியுள்ளது.