• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-09 18:51:02    
சீன-லத்தின் அமெரிக்க பொருளாதார வர்த்தக உறவு

cri
சீன-லத்தின் அமெரிக்க பொருளாதார வர்த்தக உறவின் வளர்ச்சிக்கு பெரும் உள்ளார்ந்த ஆற்றல் உண்டு. தற்போது, சாதகமான வாய்ப்பைப் பயன்படுத்தி, லத்தின் அமெரிக்காவுடனான பொருளாதார வர்த்தக உறவை ஆக்கப்பூர்வமாக வளர்ச்சியுறச்செய்ய சீனா விரும்புவதாக சீன வணிகத்துறை அமைச்சகத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் இன்று தெரிவித்தார். சீன அரசு தலைவர் ஹு சிந்தாவின், பிரேசில், ஆர்ஜென்டினா, சிலி, கியூபா ஆகிய நாடுகளிலான அரசு முறை பயணத்தை முன்னிட்டு, செய்தியாளருக்கு பேட்டி அளிக்கையில் அவர் இதைத் தெரிவித்தார். சீன-லத்தின் அமெரிக்க பொருளாதாரம், ஒன்றிடம் இல்லாதவற்றை மற்றது நிறைவு செய்யும் வாய்ப்பு அதிகம். இரு தரப்பு பொருளாதார வர்த்தக ஒத்துழைப்புக்கு பரந்துபட்ட எதிர்காலம் உண்டு. இரு தரப்பு பொருளாதாரத்தின் கூட்டு வளர்ச்சியை முன்னேற்றுவிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார். சீன அதிகார வட்டாரத்தின் புள்ளி விபரங்களின் படி, நீண்டகாலமாக சீனாவுடனான வர்த்தகத்தின் சாதகமான நிலுவை லத்தின் அமெரிக்க நாடுகள் நிலைநிறுத்தியுள்ளன. கடந்த ஆண்டில் சீன-லத்தின் அமெரிக்க வர்த்தக மதிப்பு 2680 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது.