• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-09 20:38:30    
ஹு சிந்தாவும் புஷும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வது

cri
சீன அரசு தலைவர் ஹுச்சிந்தாவ் 8ம் நாளிரவு கோரிக்கையின் படி அமெரிக்க அரசு தலைவர் புஷுயுடன் தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டார். கடந்த சில ஆண்டுகளில் பல ஒத்துழைப்பு துறைகளில் சீனவும் அமெரிக்காவும் முன்னேற்றமடைந்ததை ஹுச்சிந்தாவ் உயர்வாக மதிப்பீடு செய்துள்ளார். இரு நாட்டுறவின் வளர்ச்சியிலான சரியான திசையை உறுதியாக பிடித்து இரு நாடுகளிடையில் உருவாக்கப்பட்ட 3 கூட்டறிக்கைகளின் கோட்பாட்டுக்கு இணங்க செயல்பட்டால், இருநாட்டுறவு சீராகவும் நிதானமாகவும் வளர்ச்சியுற முடியும் என்று ஹுச்சிந்தாவ் வலியுறுத்தினார். புதிய பதவி காலகட்டத்தில் பல்வேறு துறைகளிலான அமெரிக்க-சீன ஒத்துழைப்புறவை வலுப்படுத்துவதில் ஈடுபடுவதாக புஷ் தெரிவித்துள்ளார். தைவான் பிரச்சினை தொடர்பான தன் நிலைப்பாட்டை அமெரிக்க அரசு மாற்ற மாட்டாது என்று அவர் உறுதிப்படுத்தினார். தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வது உள்ளிட்ட உயர் நிலை பரிமாற்றத்தை இரு நாட்டு அரசு தலைவர்கள் நிலைநிறுத்துவது என்பது, சீன-அமெரிக்க உறவு மேலும் வளர்ச்சியுறுவதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது. சீன வெளிநாட்டமைச்சின் செய்தித்தொடர்பாளர் சாங் சியே அம்மையார் இன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.