• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-17 18:18:36    
ஐ.நா.வில் சேர, தைவானுக்கு தகுநிலை இல்லை

cri

தைவான், சீனாவின் ஒரு பகுதி. அரசுரிமை படைத்த நாடு மட்டும் சேரக்கூடிய ஐ.நா.வில் சேர்வதற்கான தகுநிலை, தைவானுக்கு அறவே இல்லை. சீன அரசு அவையின் தைவான் விவகார அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் லீ வி இ இன்று பெங்சிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டார். இப்பிரச்சினை பற்றி சீனப்பெருநிலப்பகுதி பல முறை தன் நிலைப்பாட்டினை தெரிவித்திருக்கின்றது. ஐ.நாவிலுள்ள சீனாவின் பிரதிநிதித்துவ உரிமையில், தைவான் அடங்கும். அரசியல், சட்டம், ஒழுங்கு ஆகியவற்றில் இப்பிரச்சினை, முற்றாக தீர்க்கப்பட்டு விட்டது என்றார், அவர். கூறப்படும் "தைவான்" என்ற பெயரில் ஐ.நாவில் சேர விண்ணப்பிப்பது என்பது, "தைவான் சுதந்திர" நடவடிக்கையில் ஈடுபட, சென் சுய் பிங் அதிகார வட்டாரம் மேற்கொண்டுள்ள மற்றொரு முக்கிய நடவடிக்கையாகும். ஐ.நா. சாதனத்தையும் தொடர்புடைய தீர்மானத்தையும் அத்துமீறும் செயலும், பொது இணக்கத்துக்குரிய "ஒரு சீனாவுக்கு" அறைகூவல் விடுக்கும் நடத்தையும் மிகப்பல ஐ.நா. அங்க நாடுகளின் ஆதரவை எவ்விதத்திலும் பெற முடியாது என்று லீ வி இ கூறினார்.