• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-21 17:24:26    
துருக்கி நேயர் Musa Ozal கேள்வி: பாதிக்கப்பட்ட மக்களின் உணவு, ஆடை முதலிய அன்றாட வாழ்க்கை தேவைகளை நிறைவேற்ற, சீன அரசு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்?

cri
பதில்: மே திங்கள் 19ம் நாள், சீன அரசவையின் மீட்புதவிப் பணி தலைமையகத்தின் 10வது கூட்டத்திற்கு, தலைமையமைச்சர் வென்சியாபாவ் தலைமை தாங்கினார். அனாதைக் குழந்தைகள், முதியவர்கள், ஊனமுற்றோர் ஆகியோருக்கான உதவிப் பணியை செவ்வனே செய்து, அவர்களின் அடிப்படை வாழ்க்கைக்கு உத்தரவாதமளிக்க வேண்டும். அடுத்த 3 திங்களில், ஒவ்வொருவருக்கும் திங்கள்தோறும் 600 யுவான் உதவித் தொகை வழங்க வேண்டும் என்று இக்கூட்டம் திட்டமிட்டுள்ளது.
மே திங்கள் 18ம் நாள் மாலை 5 மணி வரை, சீன நடுவண் நிதி துறை, 579 கோடியே 20 இலட்சம் யுவானை ஒதுக்கீடு செய்துள்ளது. உள்ளூர் அரசு ஒதுக்கீடு செய்த 198 கோடியே 40 இலட்சம் யுவானை சேர்த்தால், முழு நாட்டின் நிதி துறைகள், மொத்தம் 779 கோடியே 40 இலட்சம் யுவானை ஒதுக்கீடு செய்துள்ளன. 19ம் நாள் மாலை 1 மணி வரை, நாட்டில் 1083 கோடியே 40 இலட்சம் யுவான் உதவித் தொகை திரட்டப்பட்டுள்ளது. இந்நடவடிக்கைகள் மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்ற துணை புரியும்.