• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-21 20:21:47    
ஜெர்மன் நேயர் Helmut கேட்டார்:
கடும் நிலநடுக்கத்தால், நீர் சேமிப்பு அணைக்கட்டுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை, ஒலிபரப்பிலிருந்து கேட்டறிந்தேன். தற்போது, எந்த அணைக்கட்டில் இடர்பாடு ஏற்பட்டுள்ளது? யாங்சி ஆற்றின் மூ மலை பள்ளத்தாக்கு நீர் தேக்கம் பாதிக்கப்பட்டதா? மோசமான நிலையைத் தவிர்க்க, என்ன செய்யலாம்?

cri
ஜெர்மன் நேயர் Helmut கேட்டார்:

கடும் நிலநடுக்கத்தால், நீர் சேமிப்பு அணைக்கட்டுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை, ஒலிபரப்பிலிருந்து கேட்டறிந்தேன். தற்போது, எந்த அணைக்கட்டில் இடர்பாடு ஏற்பட்டுள்ளது? யாங்சி ஆற்றின் மூ மலை பள்ளத்தாக்கு நீர் தேக்கம் பாதிக்கப்பட்டதா? மோசமான நிலையைத் தவிர்க்க, என்ன செய்யலாம்?

பதில்:

மே திங்கள் 12ம் நாள் சிச்சுவான் மாநிலத்தின் வென்சுவான் மாவட்டத்தில் நிகழ்ந்த கடும் நிலநடுக்கத்தால், சிச்சுவான் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் மாநகரங்களிலுள்ள நீர் சேமிப்பு வசதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 17ம் நாள் வரை, எந்த நீர் தேக்கமும், வழிந்தோடவில்லை.

துவக்க ரீதியான சோதனையின் படி, வென்சுவான் நிலநடுக்கத்தால், யாங்சி ஆற்றின் மூ மலை பள்ளத்தாக்கு, Ge zhouba பள்ளத்தாக்கு ஆகிய நீர்தேக்கங்களின் இயக்கம் பாதிக்கப்படவில்லை என்று சீன யாங்சி ஆற்றின் மூ மலை பள்ளத்தாக்கு திட்டப்பணி வளர்ப்பு தலைமை தொழில் நிறுவனம் 13ம் நாள் அறிவித்துள்ளது.

சீன நீர்சேமிப்பு அமைச்சகத்தின் மீட்புதவித் தலைமைக்குழுத் துணைத் தலைவர் லீயு நிங் மே 17ம் நாள் சீன மத்திய தொலைக்காட்சி நிலையத்துக்கு பேட்டியளித்தார். நிலநடுக்கத்துக்குப் பின், நீர்சேமிப்பு அமைச்சகம் உடனடியாக மீட்புதவி தலைமையகத்தை நிறுவி, நீர்சேமிப்பு வசதிகளுக்கான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியைச் செய்வதற்காக, சுமார் 20 கோடி யுவான் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது என்று குறிப்பிட்டார்.