ரஷியர் Aresn Argiligin கேள்வி: வென் ச்சுவான் நிலநடுக்கத்தால் சீனாவுக்கு ஏற்பட்ட நேரடி பொருளாதார இழப்பு எவ்வளவு? தற்போது, சர்வதேசச் சமூகம் சீனாவுக்கு வழங்கிய உதவித்தொகை மற்றும் நிவாரணப் பொருட்களின் மதிப்பு எவ்வளவு?
cri
பதில்: நிலநடுக்கத்தால், சீனாவுக்கு ஏற்பட்ட நேரடி பொருளாதார இழப்புத் தொகை, 13 முதல் 15 ஆயிரம் கோடி யுவானை எட்டியுள்ளது. இந்நிலநடுக்கம், தென்மேற்கு சீனாவின் சி ச்சுவான் மாநிலத்துக்கு மாபெரும் பாதிப்பை ஏற்படுத்திய போதிலும், சீனப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த நிலைமையைப் பாதிக்காது. சி ச்சுவான் மாநிலத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்த உடன், உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் பல்வேறு சமூக வட்டாரங்கள், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உதவித்தொகை மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளன. பொதுத் துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, 22ம் நாள் நண்பகல் 12 மணி வரை, சீனா ஏற்றுக்கொண்டுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளின் உதவித்தொகை, 2 ஆயிரத்து 141 கோடியே 60 இலட்சம் யுவானாகும். ்தில், ஆயிரத்து 257 கோடியே 90 இலட்சம் யுவான் பெறப்பட்டுள்ளது. 191 கோடியே 50 இலட்சம் யுவான், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 21ம் நாள் இரவு 9 மணி வரை, சௌதிகள் அரேபியா, பாகிஸ்தான், பிரிட்டன், அமெரிக்கா, ஐ.நாவின் அகதி அலுவலகம் முதலியவை உதவியாக வழங்கிய கூடாரங்களின் எண்ணிக்கை, ஒரு இலட்சத்து 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சகம் அறிக்கையில் கூறியது. 22ம் நாள் முற்பகல் 10 மணி வரை, சி ச்சுவானில் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் பெற்றுக்கொண்டுள்ள 32 தொகுதிகள் மீட்புதவிப் பொருட்கள், 15 நாடுகளைச் சேர்ந்தவை. அவற்றின் எடை, ஒராயிரம் டன்னைத் தாண்டியுள்ளன. அவை, கூடாரங்கள், உணவுப் பொருட்கள் மற்றும் போர்வைகளை முக்கியமாகக் கொண்டுள்ளன.
|
|