• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-23 17:20:23    
வியட்னாம் நேயர் Vuong Hoai Phuong கேள்வி: நிலநடுக்கத்திற்குப் பின், சிச்சுவான் மக்கள் நிதானம் பெறுவதற்கு, சீன அரசு எவ்வாறு உதவி செய்யும்?

cri
பதில்: தற்போது பாதிக்கப்பட்ட மக்களை தற்காலிகமாகக் குடியமர்த்தும் பணி தொடங்கியுள்ளது. 20ம் நாள் நடைபெற்ற அரசவை செய்தி அலுவலகத்தின் செய்தியாளர் கூட்டத்தில் செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்த போது, சீன பொது துறையின் துணை அமைச்சர் jiangli இவ்வாறு கூறினார். பாதிக்கப்பட்ட மக்களின் வசிப்பிடங்களை உருவாக்கும் வகையில், 7 இலட்சம் பெரிய கூடாரங்களையும் 8 இலட்சம் சாதாரண கூடாரங்களையும் பொது துறை அமைச்சகம் அவசரமாக வாங்கியுள்ளது. தற்காலிக வீடுகளை உருவாக்கும் வகையில், தொடர்புடைய வாரியங்கள் ஏற்பாடு செய்து வருகின்றன. 20ம் நாள் வரை, நடுவண் மற்றும் நாட்டின் பல்வேறு நிலை அரசுகள், மொத்தம் ஆயிரத்து நூற்று எழுபதிரண்டு கோடியே 7 இலட்சம் யுவான் உதவித் தொகையை வழங்கியுள்ளன. பொது மக்கள், ஆயிரத்து 392 கோடியே 5 இலட்சம் யுவானை வழங்கியுள்ளனர். பொது துறை அமைச்சகம், இராணுவப் படை, பல்வேறு இடங்களின் பொது துறை வாரியங்கள், செஞ்சிலுவை சங்கம் ஆகிய அமைப்புகள், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு, இரண்டு இலட்சத்து 78 ஆயிரத்து 462 கூடாரங்கள், 7 இலட்சத்து 83 ஆயிரத்து 984 போர்வைகள், 17 இலட்சத்து 83 ஆயிரத்து 600 பஞ்சாடைகள், 21 கோடியே 80 இலட்சம் யுவான் மதிப்புள்ள உணவு மற்றும் குடிநீர் ஆகியவற்றை வழங்கியுள்ளன. இவை, பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசிய வாழ்க்கை தேவைகளுக்கும் உற்பத்திக்கும் உத்தரவாதமளிக்கும். தற்காலிகமாக குடியமர்த்தும் பணி முடிந்த பின், புனரமைப்பு திட்டம் மற்றும் கட்டுமானத்தை பொது துறை அமைச்சகம் தொடங்கும் என்று jiangli சுட்டிக்காட்டினார்.