• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-23 18:07:39    
துருக்கி நாட்டு நேயர் மூசா ஓசலின் கேள்வி:
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உளநல சிகிச்சைக்கு, சீன அரசு எத்தகைய நடவடிக்கைகள் மூலம் உதவி செய்யும்?

cri
பதில்:

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களை உடல்நல ரீதியாக குணப்படுத்துவது பற்றி உளவியல் நிபுணர்கள் பல்வேறு வழிமுறைகளைத் தேடி வருகின்றனர். நிலநடுக்கத்துக்கு பின், உளநல நெருக்கடியை சமாளிக்கும் பணியில் சீன அரசு மற்றும் சர்வதேச அளவில் அத்தகைய மீட்புக்கான சிறப்பு நிறுவனங்கள் ஈடுபடத் துவங்கியுள்ளன. Chengdu நகரத்தின் huaxi மருத்துவமனையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளை கவனிக்கும் வளர்ப்பு தாய்மாரை தேடும் அரசு சாரா நிறுவனங்கள் ஆக்கப்பூர்வமாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. ஷங்காய், qingdao, haerbin, guangdong ஆகிய பிரதேசங்களின் சிறப்பு மருத்துவ ஊழியர்கள் சிச்சுவான் மாநிலத்தின் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சென்று மருத்துவ மற்றும் உளநல சிகிச்சையில் ஈடுபடுகின்றனர். தவிர, பேரிடர் நீக்க மீட்புதவிப் பணிக்கான உளநல நெருக்கடியை சமாளிக்கும் தொண்டு நிறுவனம் உருவாக்கப்பட்டது. நாள் முழுவதும், உள நல உதவிக்கான உடனடித் தொலை பேசி இணைக்கப்பட்டது. 20 பேர்களால் உருவாக்கப்பட்ட tangshan நகரத்தின் உளநல ஆலோசனைத் தொண்டர் சேவை குழு, சிச்சுவான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பணி புரிந்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் tangshan கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டராவர்.