• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-26 15:25:22    
தமிழ் இணையத்தைப் பயன்படுத்தும் அமுதாராணி: நிலநடுக்கத்தில் இறத்தவர்களின் குடும்பத்தினர்க்கு என்ன நிவரணம் அளிக்க சீனா திர்மணித்து உள்ளது?N.Ramasamy என்பவரின் கேள்வி: சீன செஞ்சிலுவை சக்கம் மூலமாக நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சீன மக்களுக்கு நிதி உத்வி எவ்வளவு கிடைத்து உள்ளது?

cri
பதில்:22ம் நாள், சர்வதேசச் சமூகம், சீனாவின் சி ச்சுவான் மாநிலத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு, உதவித்தொகை மற்றும் நிவாரணப் பொருட்களைத் தொடர்ந்து வழங்கி, நிலநடுக்கப் பேரிடர் நீக்கப் பணி மற்றும் புரனமைப்புப் பணிக்கு, உதவிகளை வழங்கி வருகிறது.
சீனாவுக்கு, 45 கூடாரங்கள் உள்ளிட்ட முதலாவது தொகுதி நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்றுள்ளதோடு, இரண்டாவது தொகுதி மனித நேய உதவிக்கான ஆயத்தப்பணி முடிவடைந்துள்ளது என்று அர்ஜென்டீன வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது. 2 ஜெர்மனி மீட்புதவிப் பணியாளர்களையும் ஏராளமான மருத்துவச் சிகிச்சை மீட்புதவிப் பொருட்களையும் கொண்டு வரும் விமானம், புறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசு, சீனாவுக்கு 10 ஆயிரம் கூடாரங்களை கூடுதலாக வழங்கத் தீர்மானித்தது. இது வரை, பாகிஸ்தான் உதவியாக வழங்கிய கூடாரங்களின் எண்ணிக்கை, 22 ஆயிரத்து 260ஐ எட்டியுள்ளன.
அமெரிக்கச் சர்வதேச வளர்ச்சி அலுவலகம், சீனாவில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மக்களுக்கு வழங்கிய 8 இலட்சத்து 15 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்பிலான மீட்புதவிப் பொருட்கள், 22ம் நாள் முற்பகல் சி ச்சுவான் மாநிலத்தின் சங் து நகர் சென்றடைந்தன.
துர்க்மேனிஸ்தான், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உதவியாக வழங்கிய பொருட்கள் 22ம் நாளிரவு, சீன கான் சூ மாநிலத்தின் லான் ச்சோ நகரின் ச்சோங் ச்சுவான் விமான நிலையத்தை சென்றடைந்தன. ஆடைகள், போர்வைகள், தலையணைகள், மருந்துப் பொருட்கள், மருத்துவச் சிகிச்சை உபகரணங்கள் முதலிய மக்களுக்கு உடனடியாகத் தேவைப்படும் பொருட்கள், அவற்றில் இடம்பெறுகின்றன.
ஆஸ்திரேலிய மேற்கு பசிபிக் வங்கி, அங்குள்ள சீனத் தூதரகத்தின் மூலம், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஒரு இலட்சம் patacaவை உதவியாக வழங்கியுள்ளது. Mauritaniaவின் பொது வங்கி, சீனாவில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு 2 இலட்சம் அமெரிக்க டாலரை உதவியாக வழங்கத் தீர்மானித்துள்ளது.