• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-26 15:27:31    
பிரேசில் நேயர் Pedro கேள்வி : சீனாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு பணம் மற்றும் பொருளுதவி வழங்குகின்றோம் ?

cri

பதில் : நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிசெய்ய விடும்பினால், நீங்கள், பல்வேறு நாடுகளிலுள்ள சீனத் தூதரகங்களுக்குச் சென்று உதவித்தொகை அளிக்கலாம். மேலும், சர்வதேசச் சீன வானொலி இணையதளத்தின் சீன செஞ்சிலுவை சங்க நிதியம், song qingling நிதியம் ஆகியவற்றின் கூட்டு ஆலோசனைப்படி, உலக நன்கொடை நடவடிக்கைகளில் நீங்கள் கலந்து கொள்ளலாம். அதற்கு இந்த இணைய பக்கங்களில் உலா வாருங்கள்.
http://english.cri.cn/tools/online/crcf/index.htm
http://english.cri.cn/2946/2008/05/15/301@358023.htm


மே 23ம் காலை 10மணி வரை, சிச்சுவான் மாநிலத்தில் கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான தொடர்புடைய சர்வதேச நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளின் நிவாரண உதவித்தொகை 2கோடியே 5லட்சத்து 50ஆயிரம் அமெரிக்க டாலராகும்.
அண்மையில், ஆஸ்திரேலியா, இத்தாலி, கியூபா, துர்க்மேனிஸ்தான், அமெரிக்கச் சர்வதேச வளர்ச்சி அலுவலகம் முதலிய சர்வதேச நிறுவனங்களும் வெளிநாடுகளும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மீட்புதவித்தொகை மற்றும் பொருட்கள், மருத்துவத் துறையிலான உதவி ஆகியவற்றை வழங்கின.
23ம் நாள், 9லட்சத்து 50ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மீட்புதவிப் பொருட்களை ஆஸ்திரேலிய அரசு மீண்டும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு வழங்கியது. இதற்கு முன், சர்வதேசச் செஞ்சிலுவை சங்கம் மூலம், ஆஸ்திரேலிய அரசு 9லட்சத்து 50ஆயிரம் அமெரிக்க டாலரை வழங்கியுள்ளது என்று தெரிய வருகின்றது.
அதே நாள், சீனாவுக்கு இத்தாலிய அரசு வழங்கிய 33லட்சம் யூரோ மதிப்புள்ள பொருட்களும் நிதித்தொகையும் சிச்சுவானின் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை சென்றடைந்தன.
22ம் நாள் காலை, அமெரிக்கச் சர்வதேச வளர்ச்சி அலுவலகம் மீண்டும் வழங்கிய 8லட்சத்து 15ஆயிரம் மதிப்புள்ள மீட்புதவிப் பொருட்கள் சிச்சுவான் மாநிலத்தை சென்றடைந்தன.
தவிரவும், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான துர்க்மேனிஸ்தானின் மீட்புதவிப் பொருட்கள் கான் சு மாநிலத்தின் லான் ச்சோ நகரின் ச்சோங் ச்சுவான் விமான நிலையத்தை சென்றடைந்தன.