இந்திய நேயர் பி.க்ண்ணன்சேகர் கேள்வி :சீனாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் அதிகமான ஏரிப்பகுதிகள் நீர் நிரம்பி வழிவதால் மீட்புப் பணிகள் தாமதம் ஆகிறது என்பது உண்மையா?
cri
பதில்:தொடர்ச்சியான போராட்டத்தின் மூலம், நிலநடுக்க மையப்பகுதியான வென் ச்சுவான் மாவட்டத்துக்குச் செல்லும் பாதையைப் பழுது பார்க்கும் பணியில், முன்னேற்றம் காணப்பட்டுள்ளது என்று சீனப் போக்குவரத்து அமைச்சகம் 15ம் நாள் வெளியிட்ட செய்தி கூறியது. போக்குவரத்து வாரியங்கள், வென் ச்சுவானுக்குச் செல்லும் பாதையை 4 திசைகளிலிருந்தும் திறந்து கொண்டிருக்கின்றன. 15ம் நாள் விடியற்காலை வரை, மிக விரைவாக முன்னேறிய ஒரு பாதை, வென் ச்சுவானிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தற்போது, பழுது பார்க்கும் பணி, தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று போக்குவரத்து அமைச்சகம் கூறியது. நிலநடுக்கம் நிகழ்ந்த பின், செயற்கை கோள், உள்ளிட்ட முன்னேறிய வசதிகளுடன் சீன இராணுவம் மீட்புதவிப் பணியை பன்முகங்களிலும் மேற்கொண்டுள்ளது. 18ம் நாள் 550க்கும் அதிகமான கிலோமீட்டர் நீளமான சாலையை செப்பனிட்டுள்ளது. வென் ச்சுவன் நிலநடுக்கத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பௌ சேன் இருப்புப் பாதையின் 109வது சுரங்கப் பாதை, செப்பனிடுதல் மூலம், இன்று முற்பகல் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. பௌ சேன் இருப்புப் பாதையின் போக்குவரத்து மீட்கப்பட்டது.
|
|