கொலம்பியாவின் jhon fredy castrillon gil இன் கேள்வி : இந்த நிலநடுக்கத்தில் சிச்சுவானின் ராட்சத பாண்டாகள், காயமடைந்தனவா ?
cri
பதில் : சிச்சுவான் மாநிலத்தின் வனத்தொழில் ஆணையத்தின் கூற்றுகளுக்கு இணங்க, நிலநடுக்கம் நிகழ்ந்த பின், wo long இயற்கை காப்பு மண்டலத்தின் 80க்கு மேற்பட்ட ராட்சத பாண்டாக்களில் மூன்று காணாமல் போயின. கடந்த சில நாட்களில், அவற்றில் ஒன்று கண்டறியப்பட்டது. பணியாளர்கள், மற்ற இரண்டு ராட்சத பாண்டாக்களைத் தேடி வருகின்றனர். இப்போது, wo long இயற்கை காப்பு மண்டலத்தில் பாண்டா இனப்பெருக்க மையத்தின் 53 ராட்சத பாண்டாக்கள் பாதிப்பேதுமின்றி தப்பின. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, பொது மக்களுக்கும் பல்வேறு நாட்டு விளையாட்டு வீரர்களுக்கும் காட்சிக்கு வைக்கப்படவுள்ள 8 ராட்சத பாண்டாக்கள், மே திங்கள் 24ம் நாள் சிறப்பு விமானத்தின் மூலம், cheng du விலிருந்து பெய்சிங் சென்றடைந்து, பெய்சிங் மிருகக்காட்சிச்சாலையில் ராட்சத பாண்டா அகத்தில் வைக்கப்பட்டுள்ளன. பெய்சிங் மிருக்காட்சிச்சாலையின் பராமரிப்பாளர்களின் சிறந்த கவனத்துடன், இப்போது, அவை, நல்ல நிலையில் இருக்கின்றன. இயல்பற்ற நிலைமை, ஏதும் தோன்றவில்லை. திட்டப்படி, நவம்பர் திங்களில் அவை சிச்சுவான் wo long இயற்கை காப்பு மண்டலத்திலுள்ள ராட்சத பான்டா இனப்பெருக்க மையத்துக்கு திருப்பி அனுப்பப்படும்.
|
|