துருக்கி நாட்டு நேயர் மூசா ஓசலின் கேள்வி:
சிச்சுவான் மாநிலம் மற்றும் பிற இடங்களின் பொது மக்கள், நிலநடுக்கத்துக்கு முன் வாங்கிய கடன்களை திருப்பிக் கொடுக்க வேண்டிய நாள் ஒத்துப்போடப்படுமா?
பதில்:
நிலநடுக்கத்துக்கு பின், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களின் நாணயச் சேவைப் பணியை முழுமூச்சுடன் செவ்வனே செய்வது பற்றிய சுற்றறிக்கையை சீன மக்கள் வங்கி, சீன வங்கிக்கான கண்காணிப்பு ஆணையம் ஆகியவை கூட்டாக வெளியிட்டன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிச்சுவான், gansu,shanxi(陕西),chongqing,yunnan ஆகிய மாநிலங்கள் அல்லது நகரங்களுக்கான நாணயச் சேவை மீட்பு பற்றிய சிறப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த தீர்மானிதுள்ளன. பேரிடருக்கு முன் வழங்கியுள்ள கடன்களை உரிய முறையில் நிர்வகிக்க வேண்டும். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் இன்னல்களை பல்வேறு நாணய நிறுவனங்கள் போதியளவில் கருத்தில் கொள்ள வேண்டும். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேங்களில் உரிய நேரத்தில் கடன்களைத் திருப்பித்தர முடியாத தொழில் நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள், பாதிக்கப்பட்ட பிரதேங்களுக்கான நிவாரண கடனுதவியை பெறலாம். கடன் வாங்கியவர் முன்முயற்சியுடன் கடன்தொகையை திருப்பிக் கொடுத்தாலம், அவர்களுக்கு உரிய முறையில் இசைவான தொண்டு புரிய வேண்டும்.
|