இரண்டு லட்சம் மக்கள் தொகை கொண்ட சாரா இனம், நாட்டின் மேற்குப் பகுதியில் வாழ்கின்றது. அதன் பிரதிநிதியான மாஃபுன் சன், முதன்முதலாக இக்கூட்டத்தொடரில் கலந்து கொள்கிறார். முழு மாநிலத்து தேசிய இன மக்கள் தம் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் காரணமாக, மக்கள் பேரவையின் பிரதிநிதியாகத் தம்மைத் தேர்ந்தெடுத்திருப்பதாக, அவர் கருதுகிறார். கடந்த 5 ஆண்டுகளில் சாரா இனமக்களின் நபர்வாரி வருமானம் ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளது. 9வது ஐந்தாண்டு திட்டத்தின் போது அதன் அதிகரிப்பு வேகம் 10 விழுக்காட்டை எட்டியுள்ளது. பொது மக்களின் வாழ்க்கை நிலையும் உயர்ந்துள்ளது. வீட்டுப்பயன்பாட்டுக்கான மின்சார சாதனங்கள், ஏறக்குறைய எல்லா வீடுகளிலும் உண்டு என்று அவர் கூறினார்.
சிறுபான்மைத் தேசிய இனப் பிரதேசங்களின் பொருளாதார அடிப்படை பின்தங்கிய நிலையில் உள்ளபடியால், பல்வேறு தரப்புகள் தொடர்ந்தும் அதற்கு உதவியும் ஆதரவும் அளிக்க மேண்டும். இதற்கிடையில் இப்பிரதேசத்து மக்கள் பாடுபட்டுப் போராடி வளர்ச்சிக்கான வாய்ப்புகளைப் பரந்தளவில் அதிகரிக்க வேண்டும். கட்சியின் தலைமையில் நாட்டின் உதவியுடன் எங்கள் ஊர் வளர்ச்சியுறுவது உறுதி என்று நம்புகிறோம் என்றார் அவர்.
கடந்த 5 ஆண்டுகளில் அடிப்படை அமைப்புகளின் கட்டுமானம் மற்றும் உயிரின வாழ்க்கைச் சூழல் கட்டுமானத்துக்கு அரசு பெரும் ஆதரவளித்துள்ளது மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில் அது கவனம் செலுத்துகின்றது. சின்காய்-திபெத் இருப்பு பாதை, இயற்கை வாயுவை மேற்குப் பகுதியிலிருந்து கிழக்குப் பகுதிக்கு அனுப்புவது உள்ளிட்ட முக்கிய திட்டப்பணிகளின் கட்டுமானம் சுமுகமாக நடைபெற்றமை, சிறுபான்மைத் தேசிய இன மக்கள் வளர்ச்சிக்கான நம்பிக்கையைக் காண உறுதுணை புரிந்துள்ளது. அத்துடன், அவர்களின் பொருளாதார வருமானத்தையும் அதிகரித்துள்ளது.
1 2 3
|