தலைமை அமைச்சரின் அறிக்கையை கேட்டு பெரும் ஊக்கம் அடைந்துள்ளேன். கடந்த சில ஆண்டுகளில் அடிப்படை அமைப்புகளுக்கான அரசின் முதலீடு மிகவும் அதிகம் என்பது என் மனதில் ஆழப்பதிந்துள்ளது. நெடுஞ்சாலை மற்றும் இருப்பு பாதைக்கான முதலீடு மிகவும் அதிகம். இது பொருளாதார வளர்ச்சிக்கு சிறந்த அடிப்படையை உருவாக்கியுள்ளது. கடந்த 5 ஆண்டுகள், மக்களின் வாழ்க்கை நிலை பெரிதும் உயர்ந்த 5 ஆண்டுகளாகும். சிறுபான்மைத் தேசிய இனங்களின் பிரதிநிதி என்ற முறையில், இதை நன்கு உணர்ந்துள்ளேன் என்று மங்கோலிய இனப் பிரதிநிதி சாங் சொ சென் கூறினார்.
சிறுபான்மைத் தேசிய இனப் பிரதேசங்களின் விரைவான வளர்ச்சிக்குத் தொடர்நது ஆதரவளிக்க வேண்டும் என்று, தலைமை அமைச்சர் கூறியதை பிரதிநிதிகள் வெகுவாகப் பாராட்டினர். சிறுபான்மைத் தேசிய. இனப் பிரதேசங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டுமாயின், அரசின் ஆதரவை அதிகரிக்க வேண்டும். அன்றி, சிறுபான்மைத் தேசிய இனப் பிரதேசங்களின் ஊழியர்களுக்கான பயிற்சியை வலுப்படுத்த, பல்வேறு தேசிய இன மக்களிடையிலான ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த வேண்டும். இப்படிச்செய்தால் தான் பல்வேறு தேசிய இன மக்கள் கூட்டாக வளர்ச்சியுற முடியும் என அவர்கள் தெரிவித்தனர். 1 2 3
|