• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-06-04 10:32:03    
ஹார்பின் நகரில் பனிக்கட்டி சிற்பம்

cri

சீன மக்கள், வண்ண நிறத்தாள் கொண்டு, பல்வகை விளக்குகளைத் தயாரிப்பதில் தேர்ச்சி பெற்றவர். இவற்றில் டிராகன் விளக்கு, அரண்மனை விளக்கு, மலர் விளக்கு ஆகியவை குறிப்பிடத் தக்கவை. வட கிழக்கு சீனாவிலான ஹார்பின் நகர், பனிக்கட்டி நகர் எனப் பெயர் பெற்றது. இங்குப் பல்வேறுபட்ட பனிக்கட்டி விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் குளிர்காலத்தில், இந்நகரில் பனிக்கட்டி விளக்கு விழா நடைபெறுகின்றது. பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சிற்பிகள், இங்கு வந்து செதுக்கிய பனிக்கட்டி விளக்குகள், மக்களை ஈர்த்துள்ளன.

100 ஆண்டுகளுக்கு முன், ஹார்பின் நகரம், ஒரு சிறிய மீன் பிடி கிராமமாக இருந்தது. குளிர் காலத்தில், மீனவர்கள், பனிக்கட்டியை உடைத்து, மீன் பிடித்தனர். இரவில் வெளிச்சம் பெறுவதற்காக, வாளியிலுள்ள நீர் பனிக்கட்டியாக மாறுவதற்கு முன், நீரை வெளியேற்றினர். பின்னர், இப்பனிக்கட்டி உறையின் நடுவில் திரியை வைத்து, ஏற்றினர். சிவப்பு மெழுகுவர்த்தி, வெளிச்சம் தந்தது. இது தான் முதலாவது பனிக்கட்டி விளக்காகும். தற்போது, பனிக்கட்டி விளக்கில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அது, கண்டுகளிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. பனிக்கட்டி மலர், பனிக்கட்டி தூண், பனிக்கட்டி கட்டடம் முதலிய பனிக்கட்டிச் சிற்பங்கள் தற்போது இடம்பெற்றுள்ளன. பகலில் வெண் நிறமாகவும் இரவில் பல வண்ண நிறமாகவும் இவை காணப்படுகின்றன. இவற்றைக் கண்டுகளிக்கும் போது, கற்பனை உலகில் நாடமாடும் உணர்வு ஏற்படுகின்றது.

அண்மையில் நடைபெற்ற ஹார்பின் 18வது பன்னாட்டுப் பனிக்கட்டி சிற்பக் கலைப் போட்டியில் பல்வேறு நாடுகளின் சிற்பிகள், அழைப்பின் பேரில், கலந்துகொண்டனர். ஜப்பான், ரஷியா, பிரான்சு, கனடா உள்ளிட்ட 17 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 30 பிரதிநிதிக் குழுக்கள் செதுக்கிய சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.

ஹார்பின் நகரின் பனிக்கட்டி விளக்கு, மிகவும் சிறப்பானது. அருமையானது. அதை வர்ணிக்க வார்த்தை இல்லை. இப்போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தமை, மகிழ்ச்சியூட்டும் நிகழ்ச்சியாகும் என்று ரஷிய பல்கலைக்கழகத்தின் கட்டட உருவரைவாளர் செர்ஜீவ் கூறினார்.

இந்நகரம், பனிக்கட்டி உலகம் போல காணப்படுகின்றது. வியக்கத்தக்கது என்று டென்மார்க்கைச் சேர்ந்த போ மொல்கார்ட் தம்பதி, முதன் முறையாக சீனாவுக்கு வருகை தந்தனர். மொல்கார்ட் கூறினார்.

1  2