
இது உண்மை. வீதிகளில் பனிக்கட்டி சிற்பங்கள் எங்கெங்கும் காணப்படுகின்றன. இவ்வற்றில், சிங்கம், புலி, கழுகு, டிராகன் உள்ளிட்ட முதலானவை இடம்பெற்றுள்ளன. தவிர, ஐரோப்பிய பாணியில் அமைந்த ஆலயம், கட்டடம் ஆகியவையும் உள்ளன. இரவில், வேறுபட்ட வடிவங்களிலான பனிக்கட்டி விளக்குகளிலிருந்து வண்ண ஒளி வீசுவதால், ஹார்பின் நகர் மேலும் அழகாகக் காணப்படுகின்றது. ஹார்பின் நகரின் வீதிகளிலும் உணவு விடுதி வாசலிலும் உள்ள பனிக்கட்டிச் சிற்பங்களைக் கண்டு, வியப்படைகின்றேன் என்று ஜப்பானியப் பயணி மொரினாகா கூறினார்.
ஹார்பின் பனிக்கட்டிக் காட்சித் தலம்,(பனிக்கட்டி உலகம்), சோலின் பூங்கா, தெய்யாங் தீவுப் பூங்கா ஆகிய இடங்களில் பனிக்கட்டி விளக்குகள் அதிக அளவில் உள்ளன. இவற்றில், ஹார்பின் பனிக்கட்டி உலகம், தற்போதைய உலகில், அளவில் பெரிய, பனிக்கட்டிப் பூங்காவாக மாறியுள்ளது.
ஹெய்லுங்ஜியாங் மாநிலத்து இயற்கைக் காட்சி பூந் தோட்டச் சங்கத் தலைவர் வுன் மெய் லுய் அம்மையார், 40 ஆண்டுகளாகப் பனிக்கட்டி செதுக்குப் பணியில் ஈடுபட்டுவருகிறார். ஹார்பின் பனிக்கட்டி விளக்கின் வளர்ச்சி வரலாற்றுக்கு அவர் சாட்சியாக விளங்குகிறார். தனிச்சிறப்பியல்பு வாய்ந்த பனிக்கட்டி கலை, நகரக் கட்டடம், பூங்காக் காட்சி ஆகிய வடிவங்களில் தோன்றியதன் காரணமாக, ஹார்பின் பனிக்கட்டி விளக்கு கலை, ஈர்ப்புத் தன்மை வாய்ந்தது என்கிறார் அவர்.
ஹார்பின் பனிக்கட்டிக் கலையுடன், எங்கள் பூங்கா பெரிதாகியுள்ளது. எங்கள் பூங்காவில், பாதை, வீடு, கட்டடம், மரம், செடிகொடிகள், மலர், புல் ஆகியவை உள்ளன. தவிர, பனிக்கட்டியை மூலப்பொருளாகக் கொண்டு, பூங்காவை அலங்காரித்திருக்கின்றோம் என்றார் அவர்.
தற்போது, ஜப்பானின் உறைபனி விழா, கனடாவின் பனிக்கட்டி குதூகல விழா ஆகியவை போல, ஹார்பின் பனிக்கட்டி விழாவும் உலகில் புகழ்பெற்றது. ஒவ்வொரு ஆண்டின் குளிர்காலத்திலும், பனிக்கட்டி விளக்கைக் கண்டுகளிக்கும் பொருட்டு, ஆயிரக்கணக்கான பயணிகள் ஹார்பின் நகருக்கு வருகை தருகின்றனர். 1 2
|