சீனாவின் தென் மேற்கு எல்லைப் பிரதேசத்தில் அமைந்துள்ள யுன்னான் மாநிலம், எழில் மிக்க இயற்கை காட்சித்தலமாகும். அங்கு, பல்வகைச் சிறுபான்மைத் தேசிய இனப் பழக்க வழக்கங்களும் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த உணவுப் பண்பாடும் உள்ளன. யுன்னான் மாநிலத்தின் சிற்றுண்டி சுவை மிக்கது.
அவற்றில், குச்சியௌமிசியெ எனும் சிற்றுண்டி குறிப்பிடத்தக்கது. நூடுல்ஸ் போன்ற உணவு வகை அது. இது தொடர்பாக ஒரு கதை வழங்குகிறது.
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன், யுன்னான் மாநிலத்தின் நாஹு ஏரியில் சிறு தீவு ஒன்று இருந்தது. அறிவாளர் சாங் என்பவர், தேர்வில் வெற்றி பெற, அங்கு முனைப்புடன் படித்துவந்தார். அவருடைய மனைவி, நாள்தோறும் அவருக்கு உணவு கொண்டு வந்துதந்தாள். அவருடைய வீடு தொலைவில் இருந்தது. எனவே, குளிர் காலத்தில், அவருக்குக் கிடைத்த உணவு குளிர்ச்சியாகவும் சத்து குறைவாகவும் இருந்தது. இதன் விளைவாக அவர் உடல் மெலிந்தது. இதைக் கண்ட அவருடைய மனைவி கவலைப்பட்டார்.
கணவருக்குச் சத்துணவை அதிகரிக்க வேண்டும் என்று எண்ணினாள். ஒரு நாள், ஆவியில் வேகவைத்த கோழி இறைச்சியையும் கோழி சூப்பையும் பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு புறப்பட்டாள். வழியில், ஒரு நீண்ட பாலத்தைக் கடந்து செல்லும் போது, மயக்கம் அடைந்தாள், பின்னர் மயக்கம் நீங்கிய பின், கணவர், குளிர்ச்சியான உணவை உண்ண நேரிடுமே என மிகவும் கவலைப்பட்டாள். ஆனால், கோழி சூப் இருந்த பாத்திரத்தைத் தொட்டுப் பார்த்த போது, அது சூடாக இருந்தது. எனவே, விரைந்து சென்று கணவருக்கு, முதல் முறையாக சூடான உணவைப் பரிமாறினாள். சூப்பில் அடர்த்தியான கோழியின் கொழுப்பு மிதந்ததே இதற்குக் காரணம் என்று அவள் கண்டறிந்தாள். பின்னர், சூப்பில், துண்டு இறைச்சி, துண்டு மீன், காய்கறி வகை முதலியவற்றைப் போட்டால், மேலும் சுவையாக இருக்கும் என்று தீர்மானித்தாள். மனைவிக்கு நன்றி கூறும் வகையில், இவ்வுணவுக்கு குச்சியௌமிசியெ என்று கணவர் பெயர் சூட்டினார் என்று கூறி முடித்தார் யுன்னான் மாநிலத்தைச் சேர்ந்த குவன்மிங் நகரிலுள்ள புகழ் பெற்ற உணவகத்தின் மேலாளர் சௌ சிங் யாங்.
1 2
|