• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-06-07 13:03:23    
யுன்னான் சிற்றுண்டி

cri

இந்த சூப்பைத் தயாரிக்கும் செய்முறை மிகவும் முக்கியமானது. பொதுவாக, பெட்டைக்கோழி, பெண் வாத்து, பன்றி எலும்பு ஆகியவையும், தண்ணீரும் குறிப்பிட்ட அளவில் இருக்க வேண்டும். அவற்றைத் தண்ணீரில் நிதானமாக வேக வைக்க வேண்டும். பின், உப்பு, மிளகு, சுவையூட்டும் பொருள் ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். பாத்திரத்தில் சூப்பை மாற்றும் போது, வெப்பமான கோழியின் கொழுப்பு அதில் ஊற்ற வேண்டும். இதன் விளைவாக, சூப் சூடாகவே இருக்கும்.

சூப் சூடாக இருக்கும் போது அவசரமாக குடிக்கக் கூடாது. முதலில், இறைச்சி வகையை சூபில் போட்டு மெதுவாக கலக்க வேண்டும். அதே வேளையில், பச்சைகாய் மிசியென் என்னும் நூடுல்ஸ் போன்ற சுவையான உணவு பொருட்களை அதில் போட வேண்டும். பின் இதை உண்ணலாம் என்று சௌ சிங் யாங் கூறினார்.

குச்சியௌமிசியெ, எனக்கு மிகவும் பிடித்தமானது. யுன்னான் மாநிலம் செல்லும் போதெல்லாம், தவறாமல் அதை வருந்துவேன். அதன் சுவை, அபாரம் என்று வட சீனாவில் பணி புரியும் சௌ சிங் யாங்கின் நண்பர் வாங் சின் யௌ அம்மையார் கூறினார்.

அதற்குத் தேவைப்படும் சூப் தயாரிப்பது மிகவும் சிக்கலானது. பொதுவாக 2 நாட்கள் தொடர்ச்சியாக வேக வைக்க வேண்டும். இப்படி தயாரித்த சூபிலான மிசியென்,சுவையாக இருக்கும். பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் பயில புறப்படுவதற்கு முன் பெற்றோர் அவர்களுக்கென உணவகத்தில் மிசியெ விருந்து ஏற்பாடு செய்கின்றனர்.


1  2