கிழக்கு சீனாவின் சியாங்சு மாநிலத்து சியாங்யின் நகரில் ஹுவாசி கிராமம், அமைந்துள்ளது. சீனாவின் நிர்வாக பிரதேச அமைப்பு முறையில், இது, கிராம நிலையில் அமைந்துள்ளது. தற்போது, சீனாவில் வளம் மிக்க இடமாக மாறியுள்ளது. அதன் நபர்வாரி ஆண்டு வருமானம், 6000 அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. சீனாவின் மிக வளமான பிரதேசங்களில், ஒன்றாகி, "சீனாவின் முதலாவது கிராமம்"என்று புகழ் பெற்றுள்ளது. சுற்றுலாத் துறையை வளர்ச்சியுறச்செய்யும் பொருட்டு, கிராமவாசிகள், அண்மையில் இரண்டு விமானங்களை வாங்கியுள்ளனர்.
விமானம் வாங்குவது என்பது, ஹுவாசி கிராமவாசிகளின் கனவாக இருந்தது. முழு கிராமத்திலும் 400க்கு அதிகமான கார்கள் உள்ளன. விமானத்தை வாங்குவதானது, முப்பரிமாணமயமாக்க போக்குவரத்து நிலைமையை உருவாக்கியுள்ளது.
சீனா உற்பத்தி செய்த விமானத்தை வாங்குவதென்ற ஹுவாசி கிராமத்தின் கனவு, இப்போது நனவாகியுள்ளது. 75 வயதான நான், மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சீன விமானத்தின் மூலம், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமான ஊரின் காட்சியைக் காண்பது உறுதி என்று, வு ரென் பியொ என்வர், விமான பயிற்சியை பார்வையிட்ட போது செய்தியாளரிடம் கூறினார்.
ஹுவாசி கிராமம், சீன சோஷலிச புதிய கிராம கட்டுமானத்தின் முன்மாதிரியாகும். 1970ம் ஆண்டுகளின் இறுதியில் சீனா, சீர்திருத்த மற்றும் வெளிநாட்டு திறப்புப்பணியை நடைமுறைப்படுத்திய பின், முழு கிராமவாசிகள் கூட்டாக வளமடைவதென்ற பாதையில் ஊன்றிநின்றனர். ஒரு சதுர கிலோமீட்டர் பங்பளவும் 1600 மக்கள் தொகையும் வாய்ந்த இந்தக் கிராமம், சுமார் 20 ஆயிரம் மக்கள் தொகை உடைய கிராம நிலை நகரமாக மாறியுள்ளது. இப்போது, இங்கு வசிக்கும் ஒவ்வொரு விவசாயிக் குடும்பத்திற்கும், புதிய வீடு மற்றும் கார் உண்டு. அவர்கள், வளம் பெற்ற சீன விவசாயிகளின் பிரதிநிதிகளாக திகழ்கின்றனர்.
1 2
|