வரவேற்புக் கூட்டம்
பிற்பகல் பேளுக்குறிச்சி சென்றடைந்தோம். செந்தில் இல்லத்தில் சற்று நேரம் தங்கியிருந்து அஞ்சல் நிலையத்தில் பணிபுரிகின்ற எங்கள் புதிய நேயரைப் பேட்டி கண்டோம். மாலை சேலம் மாவட்ட நேயர்களைச் சந்தித்து உரையாடி விருந்துண்ண வேண்டிய நிலை; ஆனால் நேயர்களும் நண்பர்களும் திரண்டு வந்ததினால் உரையாடுவது முடியாமல் போனது. உள்ளூர் பத்திரிகைச் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துவிட்டு நேயர்களிடம் விடைத்தாட்களை வாங்கிய பின் விடை பெற்று இரவு 9 மணிக்குப் பெருந்துறை சென்றோம். 1 2 3
|