• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-06-21 08:58:37    
இடம்பெயர்ந்த லியெ வ் கிராம மக்கள்

 


cri

சீனாவின் யாங்சி ஆற்று மூ மலை இடுக்கு திட்டப்பணியானது, உலகில் மிகப் பெரிய நீர் சேமிப்புத் திட்டப்பணியாகும். அதன் கட்டுமானப் பணி 1994ல் துவங்கியது. கடந்த 10 ஆண்டுகளில், தென் மேற்கு சீனாவின் சுசிங் மாநகரம், 5 லட்சத்து 60 ஆயிரம் பேரை, யாங்சி ஆற்று மூ மலை இடுக்கின் நீர் தேக்கப் பிரதேசத்திலிருந்து வேறு பிரதேசங்களுக்குக் குடியேறச் செய்துள்ளது. யாங்சி ஆற்று மூ மலை இடுக்கு நீர்த் தேக்கம், கப்பல் போக்குவரத்துக்கு இது உத்தரவாதம் அளித்துள்ளது.

லியெ வ் கிராமம், சுசிங் மாநகரத்தைச் சேர்ந்த வுலின் பிரதேசத்தில் அமைந்துள்ளது. தற்போது இக்கிராமத்தில் 2800க்கும் அதிகமானோர் உள்ளனர். 1997ஆம் ஆண்டு முதல், இக்கிராம மக்கள் வேறு இடத்துக்குக் குடியேறத் துவங்கினர். முன்பு, கிராமவாசிகள் மண் குடிசையில் வாழ்ந்தனர். குடிநீர் இல்லை;மின்சாரப் பற்றாக்குறை நிலவியது. இருப்பினும், அவர்களில் பலர், வேறு இடத்துக்குக் குடியேற விரும்பவில்லை. வேறு இடத்துக்குக் குடியேறினால், நல்ல பாக்கியமும் செல்வமும் காணாமல் போய்விடும் என்று அவர்கள் தவறாகக் கருதிவந்தனர். இதற்காக, கிராம ஊழியர், அவர்களை வற்புறுத்த வேண்டி ஏற்பட்டது. குறிப்பிட்ட அளவுடைய குடியேற்றக் கிராமத்தை நிறுவுவோம். குடியேறுவோருக்கு விளக்கம் அளித்தோம். ஆனால், அவர்கள் இதை நம்பவில்லை. இதற்கு எவ்வளவு பணம் தேவை? என்று அவர்கள் கேட்டனர். பின்னர், திட்டம் வகுப்பது, அடிப்படை வசதிகளைக் கட்டியமைப்பது, நட்ட ஈடு வழங்குவதென்ற வரையறையை வகுப்பது, வீடுகளைக் கட்டியமைக்கும் நேரம் ஆகியவற்றை ஒழங்கான முறையில் ஏற்பாடுசெய்துள்ளோம். தனி வீடுகளைக் கட்டியமைத்திருக்கின்றோம் என்று இக்கிராமத்தின் மகளிர் ஊழியரான சாங் ஜி ருன் கூறினார்.

1  2  3