இனிமேல், ஆரஞ்சு வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, சுற்றுலா, நீர் வாழ்வனவற்றின் உற்பத்தி ஆகிய 4 முக்கிய துறைகளின் வளர்ச்சிக்கு சுசிங் மாநகர நீர் தேக்கப் பிரதேசம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்;கூடிய விரைவில் வளம் பெறுவதில் குடியேற்றவாசிகளுக்கு உதவியளிக்க வேண்டும் என்று சுங்சிங் மாநகரக் குடியேற்றவாசிப் பணியகத்தின் துணைத் தலைவர் ஒ வெய் சு கூறினார். இந்நீர்த் தேக்கப் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சியையும் இப்பிரதேச மக்கள், ஓரளவு வசதி படைத்த சமுதாயத்தை உருவாக்குவதையும் இந்த 4 துறைகளின் வளர்ச்சி முன்னேற்றுவிக்கும் அதே வேளையில் குடியேற்றவாசிகளின் வாழ்க்கை நிலையை உயர்த்திப் படிப்படியாக வளமடையத் துணை புரிய வேண்டும் என்பது, அதன் நோக்கமாகும் என்றார் அவர்.
யாங்சி ஆற்று மூ மலை இடுக்கு திட்டப்பணியினால், சுமார் 11 லட்சத்து 30 ஆயிரம் பேர் வேறு இடத்துக்குக் குடியேற வேண்டும். நீர்த் தேக்கப் பிரதேசக் குடியேற்றவாசிகள் பற்றிய அரசின் கொள்கைக்கிணங்க, இவ்வாண்டின் ஜூலை திங்கள் முதல் 2006ஆம் ஆண்டு வரை, இந்நீர் தேக்கப் பிரதேசத்தைச் சேர்ந்த 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் வேறு இடத்துக்கு இடம்பெயர வேண்டும். 2009 ஆம் ஆண்டு ,யாங்சி ஆற்று மூ மலை இடுக்குத் திட்டப்பணி முழுமையாக நிறைவேறும் போது தான், இந்தக் குடியேற்றப் பணி பன்முகங்களிலும் நிறைவேற முடியும். 1 2 3
|