• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-07-05 08:33:31    
கடந்த வாரத்திலான விளையாட்டு செய்திகள்

cri

கால்பந்து

உலக கோப்பை கால்பந்தாட்டத்துக்கான தகுதிப் போட்டியில், மெக்சிகோ, 2 ஆட்டங்களில் மொத்தம் 18 கோல் போட்டு, டொமினிக்காவைத் தோற்கடித்துள்ளது. டொமினிகா, 2 ஆட்டத்திலும் ஒரு கோல் கூடப் போடவில்லை.

ஆர்ஜென்டினாவில், ரிவர் பிலேட் அணி, தேசிய கால்பந்து சாம்பியன்பட்டத்தை வென்றுள்ளது. அட்லெடிகோ ரபோலா அணியுடனான ஆட்டத்தைச் சமன் செய்து, இந்த வெற்றியை அது பெற்றது.

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்பட்டப் போட்டி, முடிவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளது. அரையிறுதி ஆட்டத்தில், போர்த்துகல் 2-1 என்ற கோல் கணக்கில் ஹாலந்தை தோற்கடித்தது. மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில், ஒரு கோல் போட்டு, செக் குடியரசைத் தோற்கடித்து, கிரீஸ் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது.

முதல் ஆட்டத்தில் கிரீசிடம் தோல்வி கண்ட போர்த்துகல், பழிவாங்குவதற்கு நல்ல வாய்ப்பு பெற்றிருக்கிறது. பயன்படுத்திக் கொள்ளுமா எனபதுதான் கேள்விக்குறி.

ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்சு ஆகிய வலுவான அணிகள், பரிதாபமாக வெளியேறியதும், டெவிட் பெக்ஹம், ஓவன் ராவ்ல், ஸிதானே, ஹென்றி, லூயிஸ் பிகோ, பெல்லாக் ஆகிய புகழ்பெற்ற ஆட்டக்காரர்கள் ஏதும் சாதிக்க முடியாமல் மண்ணைக் கவ்வியதும் இந்தப் போட்டித் தொடரின் சிறப்பம்சமாகும்.

1  2  3