டென்னிஸ்
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி, பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பிரிட்டனின் டிம் ஹென்மென் வெளியேறிவிட்டார்.
மகளிர் பிரிவில், ரஷிய வீராங்கணையர்தம் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது. ரஷியாவின் 17 வயது மரியா ஷரயோவா, அமெரிக்காவின் தேவன்போர்டை, 2-6,7-6,7-6 என்ற கணக்கில் தோற்கடித்து, இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றார். அமெரிக்காவின் செரினா வில்லியம்சுடன் அவர் மோதுகிறார்.
கோல்ப்
அமெரிக்காவின் வர்ஜினியாவில் நடைபெற்ற 28வது அமெரிக்க மகளிர் அமெச்சூர் பப்ளிக் லிங்க்ஸ் கோல்ப் சாம்பியன்பட்டப் போட்டியில், சீன-தைபே வீராங்கணை ஸெங் யா நி, வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார். 15 வயதான ஸெங், இவ்வெற்றியைப் பெறும் இராண்டாவது சீன-தைபே வீராங்கணையாவார். 1 2 3
|