தடகள்ப் போட்டி
பிரான்சில் நடைபெற்ற லில்லி சர்வதேச தடகளப் போட்டியில், சீனாவின் லியூ சியாங், 110 மீட்டர் தடையோட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். 13.41 விநாடியில் தூரத்தைக் கடந்து, பிரான்சின் டுகோரேவை இரண்டாமிடத்துக்குத் தள்ளினார்.
மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், பிரான்சின் கிறிஸ்டின் ஆரோன், 11.18 விநாடியில் தூரத்தை ஓடி முடித்து, முதலிடத்தை வென்றார். 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் அவர் தங்கப் பதக்கம் வென்றார்.
ரஷியாவின் யுலின் பெசோன்கினா, மகளிருக்கான் 400 மீட்டர் தடையோட்டப் போட்டியில், முதற்பரிசைத் தட்டிச் சென்றார். இந்தப் பிரிவில், இவர் உலக சாதனை நிகழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் நடைபெற்ற கேட்ஸ்ஹெட் சூப்பர் கிராண்ட் பிரி தடகளப் போட்டியில், மகளிருக்கான கோல் ஊன்றி உயரத் தாண்டல் நிகழ்ச்சியில், ரஷியாலின் யெலெனா இஸின்பயேவா, 4.87 மீட்டர் உயம் தாண்டி, புதிய உலக சாதனையைப் படைத்திருக்கிறார்.
பத்தாயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், பிரிட்டனின் பாவ்லா ரேட்கிலிப், தங்கப் பதக்கத்தை வென்றார். நூறு மீட்டர் தடையோட்டப் போட்டியில், ஸ்பெயினின் குலோரி அலோஸி, 12.57 வினாடியில் தூரத்தை வெற்றிகரமாகக் கடந்து, முதற்பரிசை வென்றார். 1 2 3
|