• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-07-07 08:06:17    
பசும் பாலை விரும்பும் சீன மக்கள்

cri

பெய்சிங்வாசியான 5 வயது சிறுமி சன் யுச்சியோ பல சிறுவர் சிறுமியர் போல பசு பாலை நேசிக்கிறாள்.

பசும் பால் சுவையானது. வாசம் மிக்கது. அதில் சத்து உள்ளது. அதை அருந்தும் குழந்தையின் உடல் ஆரோக்கியமாக இருக்கின்றது என்று அம்மா கூறுகின்றார். ஆகவே நான் நாள்தோறும் பசும் பால் அருந்துகின்றேன் என்றார் அவள்.

சிறுமி சன் யுச்சோ போன்ற சீனக் குழந்தைகளும் வளர்ந்தவர்களும் பசும் பால் அருந்துவது சீனாவில் பரவலாகி வருகிறது. ஆனால் 26 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1978ம் ஆண்டில் சீனாவில் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்பு பணி துவங்குவதற்கு முன் பசும் பால் பாமர மக்களின் வாழ்க்கையில் அரிதாகவே காணப்பட்டது.

அப்போது பசும் பால் அருந்துவது ஆடம்பரமாக கருதப்பட்டது. அப்போது பசும் பால் உற்பத்தி துறையும் மிகவும் பலவீனமாக இருக்கின்றது. பாரம்பரிய பண்பாட்டு மற்றும் உணவுப் பழக்கம் காரணமாக சீன மக்களில் பெரும்பாலோர் பசும் பால் அருந்துவதில்லை. சீனப் பொருளாதார வளர்ச்சி மக்களின் வாழ்க்கைத் தரத்தின் உயர்வு ஆகியவற்றுடன் மக்கள் மேன்மேலும் உணவில் கவனம் செலுத்தி வருகின்றனர். பால் உற்பத்தி துறைச் சங்கத்தின் பொறுப்பாளர் சு குன்கான் இது பற்றிக் கூறுகிறார்.

1  2  3