• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-07-07 08:06:17    
பசும் பாலை விரும்பும் சீன மக்கள்

cri

பசும் பால் நலவாழ்வுக்கு நன்மை தருகின்றது. எங்கள் வாழ்க்கையில் உயிராற்றலை ஏற்படுத்துவதற்கு உறு துணை புரிகின்றது. மிகப் பல நுகர்வோர் நாளுக்கு நாள் பசும் பால் அருந்தும் பழக்கத்தை உருவாக்கிட நாங்கள் ஊக்கத்துடன் வழிகாட்ட வேண்டும். உணவு உட்கொள்ளும் கட்டமைப்பைப் படிப்படியாகச் சீர்திருத்த வேண்டும். பசும் பால் அருந்தும் அளவை அதிகரிக்க வேண்டும் என்று சுன் குன்கான் கூறினார்.

பசுப் பாலின் மேம்பாட்டை மேலும் கூடுதலான மக்கள் அறிந்து கொள்ளச் செய்யும் வகையில் சீனப் பசும் பால் உற்பத்திச் சங்கம் பெருமளவில் சேவைபுரிந்துள்ளது. கருத்தரங்கு நடத்துவது தகவல் வழங்குவது ஆகியவை உள்ளிட்ட பல்வகை நடவடிக்கைகளின் மூலம் பசும் பால் பற்றி பிரச்சாரம் செய்து வருகின்றது. அதேவேளையில் சீனாவில் கால்நடைவளர்ப்புத் துறையும் பால் பதனீட்டுத் தொழிற்துறையும் நிதானமாகவும் விரைவாகவும் வளர்ந்துள்ளன. 2003ம் ஆண்டு வரை சீனாவில் 560க்கும் அதிகமான தொழிற்சாலைகள் இதில் ஈடுபட்டு வருகின்றன. பால் வகைகளின் உற்பத்தியளவு ஒரு கோடியே 60 லட்சம் டன்னைத் தாண்டியது. இது 20 ஆண்டுகளுக்கு முந்தியது போல 10 மடங்கு அதிகமாரும். இப்போது சீனாவின் நகரங்களிலும் கிராமங்களிலும் அங்காடிகளில் பசும் பால் தாராளமாகக் கிடைக்கின்றது.

பெய்சிங்வாசியான வுவான் பான்பான் எனும் அம்மையார் கூறுவதைப் பாருங்கள்.

இங்கே பசும் பால் நன்கு விற்பனையாகிறது. பசு பாலை வாங்கும் மக்கள் பெட்டி பெட்டியாக வாங்குகின்றனர்.. பசும் பாலாலான தயிரின் விற்பனையளவு முந்திய சில ஆண்டுகளை விட அதிகமாகும். இப்போது கோடைகாலம். ஐஸ் கிரீம் சுறுசுறுப்பாக விற்பனையாகிறது என்றார் அவர்.

இப்போது பசும் பாலும் அதனால் தயாராகும் பிற பொருட்களும் சீன மக்களின் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாத இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


1  2  3