முதலில், கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி பற்றிய கருத்துகள்.
--கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியைக் கேட்ட பிறகு, தலைசிறந்த நேயராவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்துகொண்டேன். இவ்வாண்டில் நான் தலைசிறந்த நேயராக மாறுவதற்கு முயற்சிப்பேன் என்கிறார் பேலூர் வே.ம.தமிழரசு.
--தலைசிறந்த நேயர் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார் என்பதை அறிந்துகொண்டேன். மகிழ்ச்சி! நானும் தலைசிறந்த நேயர் என்று பெயர் பெற வேண்டும் என்ற நோக்கில் தினமும் பாடுபடுவேன் என்கிறார் மயிலாடுதுறை TST.ராயன்
ஒலி என்ற எமது இதழ் குறித்து, நேயர்கள் பாராட்டும் வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.
--ஒலி எனும் இதழ் மூலம், அதிகமான கருத்துக்கள், செய்திகள், கடந்து வந்த பாதைகள் நிகழ்வுகள் மற்றும் தமிழ் மீதான ஆர்வம் பற்றியும் தெரிந்துகொண்டேன் என்கிறார் மாவலிப்பட்டி, இரா.திருசங்குதிராஸ்.
--ஒலி எனும் இதழ், படிக்கப் படிக்க ஆர்வம் ஊட்டுவதாக அமைந்துள்ளது. தங்கள் அனைவரும் தமிழ் மீது வைத்துள்ள பற்றி துல்லியமாகத் தெரிகின்றது. ஒலி இதழ், தொடர வேண்டும் என்கிறார் இலங்கை, ALM.AHAMED.
அடுத்த ஒலி இதழில், ஆரணி கருத்தரங்கு மற்றும் தமிழகப்பயணம் ஆகியவை இடம்பெறுகின்றன.
--நீங்கள் தமிழ்கப்பயணம் மேற்கொண்ட போது, நேரில் சந்திக்க இயலவில்லை. நீங்கள் வழங்கிய சிற்பபு நிகழ்ச்சியை வானொலியில் கேட்ட போது, நேரில் கலந்து கொண்ட உணர்வைத் தூண்டியது என்கிறார் 30 பள்ளிப்பட்டி,ஆர்.நல்லுசாமி.
நேயர்களே, கடந்த டிசம்பர் திங்கள் 26ம் நாள், சீனப் பெருந்தலைவர் மா சே துங்கின் 110வது பிறந்த நாளாகும். இது பற்றிய சிறப்பு நிகழ்ச்சி, பல நேயர்களைக் கவர்ந்துள்ளது.
--மாவோ பற்றிய சிறப்பு நிகழ்ச்சியைக்கேட்டேன். நவ சீனாவை உருவாக்கிய மாபெரும் தனித்தலைவரைப் பற்றிய இக்கட்டுரை, மிகவும் அருமை! இந்தியாவுக்கு ஒரு மகாத்மா காந்தி போல், சீனாவுக்கு மா சே துங் என்பதை, அறிந்துகொண்டேன் என்கிறார் 30 பள்ளிப்பட்டி, ஆர்.சுப்ரமணி.
--அரசியல் சட்டதிருத்தம் கொண்டு வந்து மக்கள் நல்வாழ்விலேயே நாட்ட முடன் செயலாற்றும் சீனாவின் பன்முக முயற்சிகளும் வெற்றி பெற்று உயர வேண்டும் என வாழ்த்துகின்றேன் என்கிறார் புதுக்கோட்டை எம்.கிருஷ்ணமூர்த்தி.
அடுத்து, சீன பண்பாடு நிகழ்ச்சி பற்றிய சில கருத்துக்கள்.
--பாய் இன மக்கள் கொண்டாடும் தீப்பந்த திருவிழா பற்றியும், இத்திருவிழாவின் தோற்றம் பற்றியும், விளக்கமாக அறிந்தேன். அத்தோடு, கிளிஞ்சலை விரும்பும் இனத்தைப் பற்றியும் கூறி, சீனப் பண்பாடு நிகழ்ச்சியை மெருகூட்டினார் என்கிறார் பூண்டி, K.குப்புசாமி.
--சாங்மிங் நகரத்தைப்பற்றியும் அது, சுத்தமான காற்று நகரமாக உள்ளதையும், அதின் கிழக்கு பகுதியில் 20 வகை தோட்டங்கள் இருப்பதையும் கேட்ட போது என் நெஞ்சு பூரித்துப் போனது. இது போன்ற உள்ளங்கள் பூமியில், அபூர்வமாகத்தான் வாய்க்கும் என்றார் புதுவை N.பாலகுமார்.
--சியாமன் நகரின் அழகு என்னைக் கவர்ந்தது. அதன் இயற்கைவளம், பச்சை பசேல் என்று இருக்கும் அதன் அமைவிடம், போன்றவற்றைப் பற்றி வெகுவாக கூறினீர்கள். மேலும் இந்நகரில் உந்து வண்டி இல்லாத காரணத்தினால் இங்கு காற்றின் தரம் உயர்வாகவும் ஒரு சிறிதளவு கூட மாசு படியாமல் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன். பொதுவாக, அந்நகரை நேரில் சென்று பார்த்து வியந்த உணர்வை எங்களின் மனதில் இந்நிகழ்ச்சி எற்படுத்தியது என்கிறார் அபினிமங்கலம் கே.அருண்.
1 2
|