அடுத்து, சில புதிய நிகழ்ச்சிகள் பற்றிய கருத்துக்கள்.
--நல வாழ்வுப் பாதுகாப்பு என்ற புதிய நிகழ்ச்சி, உடற்பயிற்சி பற்றியதாக இருக்கிறது. உப்பு நீரில் குளிப்பது உயர் இரத்த அழுத்த நோய்க்கு சிறந்த நிவாரணம் என்று கூறப்பட்டது. பயனுள்ள நிகழ்ச்சி இது என்கிறார் விழுப்புரம் எஸ்.பாண்டியராஜன்.
--நல வாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில், இரத்ததானம் செய்வோர் உடனே அதிக தண்ணீர் அருந்த வேண்டும் என்ற யோசனையும். அதன் காரணமாக மயக்கம் தடுக்கப்படலாம் என்ற யோசனையும் பயன் மிக்கவை என்கிறார் ஆரணி, JAC.சாரதா.
இணி, எமது ஒலிபரப்பு பற்றிய பிற கருத்துக்கள்.
--புத்தாண்டு நாள்காட்டியில், அறிவிப்பாளர்களின் நிழற்படத்துடன், கையெழுத்தையும் இணைத்து அச்சிட்டிருப்பது சிறப்பாக உள்ளது. என்கிறார் கைத்தறி நகர், JD.ஆனந்தன்.
--சீன சமூக வாழ்வு என்பது மறக்க முடியாத நிகழ்ச்சி! புத்தர் கோவில் பசுமைப் பூங்கா, கடலை ஒத்த ஏரிக்கள் அறபுத முத்து மூலிகை வெந்தீர் ஊற்று, சீன பெருஞ்சுவர் பற்றி, நாங்கள் இங்கு இருந்து கொண்டு, தெரிந்து கொள்ள வழிவகுக்கிறது என்கிறார் குருவம்பட்டி, தா.குமார்.
—சீன வானொலி தமிழ்ப்பிரிவின் கடிதம், எனக்கு 2003 டிசம்பர் 10ம் நாள் கிடைத்தது. எனக்கு நேயர் எண் வழங்கப்பட்டதைக் கண்டு, மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் என்கிறார் பாலூர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
--38 அன்னிய மொழிகளில் ஒலிபரப்பை உலகிற்கு அளித்து, பல நாட்டின் நேயர்களை நெருங்கிய நண்பர்களாக உருவாக்கி வருகின்ற உலகின் முதல் அரசு வானொலி சீன வானொலி என அறிந்து பெருமை கொள்கின்றேன். நேயர்கள் சீனாவின் வளர்ச்சி பற்றி தெரிந்து மேலும் பல நாடுகள் ஆழமான நப்புறவை வனர்த்து கொள்ள இணைய தளம் உதவும் என நம்புகின்றேன் என்கிறார் முனுகப்பட்டு, பி.கண்ணன்சேகர். 1 2
|