• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-07-12 14:50:03    
டென்னிஸ் வீராங்கனை ஷரபோவா

cri

இவ்வாண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்பட்டப் போட்டி நிறைவடைந்துவிட்டது.

மகளிர் பிரிவில், ரஷியாவின் மரியா ஷரபோவா, சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார். இவருக்கு வயது 17 தான். விம்பிள்டன் இறுதி ஆட்டத்துக்குத் தகுதிபெற்ற இரண்டாவது ரஷிய வீராங்கனை என்பது ஒரு சிறப்பு, மார்டினா ஷிங்கிசுக்கு அடுத்தபடி, இளம் வயதில், விம்பிள்டன் ஒற்றையர் பட்தத்தை வென்றிருப்பது மற்றொரு சிறப்பு.

எனவேதான், ஷரபோவாவின் சாதனை புதிய ரஷியப் புரட்சி எனப் புகழப்படுகிறது.

ஏற்கனவே 2 முறைபட்டம் வென்று, மூன்றாவது முறை சாதனை படைக்கத் துடித்த, அமெரிக்காவின் இரும்பு நாயகி செரீனா வில்லியம்சுடன் இறுதி ஆட்டத்தில் ஷரபோவா மோதினார். 6-1,6-4, என்ற கணக்கில், இரும்புக் கோட்டையை, வெகு எளிதாகத் தகர்த்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தை தவிடு பொடியாக்கி, பார்வையாளர்களைப் பரவசத்தில் ஆழ்த்தினார்.

1  2  3