
சீனத் தமிழ் ஒலி இதழ் வெளியிடுவது, நேயர் கடிதங்களைக் கையாள்வதில் தமிழ்ப் பிரிவுத் தலைவர், துணைத் தலைவர் பொறுப்புக்களில் இருப்பவர்களே பங்கு கொள்வது புதுதில்லி முகவரி மூலம் கடிதம் அனுப்புவது தொடர்பாக கம்பம் ஏ இருதயராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
கடிதங்களைக் கையாள்வதன் மூலம் தான் நேயர்களின் எண்ணத்தை அறிந்து கொள்ள முடியும். இது தமிழ் ஒலிபரப்பு லட்சியத்தில் ஒரு பகுதியாகும். ஆகவே அனைவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். ஒராண்டுக் காலம் இந்தப் பணியை நிறைவேற்றுவதன் மூலம் படிப்பது, தமிழில் எழுதுவது, நேரடியாகத் தமிழ் மொழியில் சிந்தித்துப் பதிலளிப்பது ஆகிய திறன் பணியாளரிடையை ஏற்படும். அவர்களின் பணித் திறமை அதிகரிப்பதற்கு இது துணைபுரியும். சில நேரத்தில் நேயர்களுக்கு நன்கு பதிலளிக்கப்பதில்லை. உடனடியாகப் பதில் கடிதம் அனுப்ப வில்லை. பதிலளிக்கும் போது குறைவாக எழுதுவது போன்ற குறை தொடர்கின்ற நிலையில் தங்களிடம் மன்னிப்பு கோருகின்றோம்.
1 2 3
|