• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-07-14 11:37:59    
நேயர் கருத்துக்கள் 04

cri
எமது ஒலிபரப்பில், சீனத் தனிச்சிறப்பியல்பு வாயந்த நிகழ்ச்சிகளை நேயர்கள் மிகவும் வரவேற்கின்றனர். இதோ, நேயர்களின் கருத்து.

--பாண்டா பாதுகாப்புத் தளம் பற்றி ஒலிபரப்பான நிகழ்ச்சி என்னை வெகுவாக கவர்ந்தது. இந்நிகழ்ச்சி மூலம் பாண்டாவை பராமரிப்பது, அதன் இனப்பெருக்கத்திற்கு சீன அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி தெளிவாக அறிந்தேன் என்கிறார் இலவுவிளை, N.ஏசுராஜ்.

--சீனப் பண்பாடு நிகழ்ச்சி மூலம், இந்திய-சீனப் பண்பாட்டு ஒப்புமையை அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பு, இரு நாட்டின் பண்பாட்டுக்கலைகளும் ஏறத்தாழ ஒன்றாகவே உள்ளன என்பதற்கு இந்நிகழ்ச்சியே சான்று என்கிறார் ராசிபுரம், S.மணிகண்டன்.

--செய்திகள், நேயர் நேரம், கேள்வியும் பதிலும், நேருக்கு நேர், அறிவியல் உலகம் போன்ற நிகழ்ச்சிகளை ஆர்வத்துடன் கேட்டு வருகிறேன். சீன வானொலி நிலையம் மேன்மேலும் புகழ்பெற வேண்டும் என உளமார வாழ்த்துகிறேன் என்கிறார் இலங்கை, M.B.பாரிஜா சிதாரா.

--தங்களின் ஒலிபரப்பு மிகவும் அருமையாக உள்ளது. இப்படியொரு மகத்தான தமிழ் சேவையினை ஆற்றிவரும் உங்களை, செய்வதற்கு உலகத்தமிழர்களின் சார்பாக வாழ்த்துகிறேன் என்கிறார் கிருஷ்ணராயபுரம், K.S.கார்த்திகேயன்.

--சீனாவின் பொருளாதார ஆற்றல் என்ற செய்தித்தொகுப்பைக் கேட்டேன். அதன் மூலம், கடந்த 23 ஆண்டுகளில் சீனாவின் பொருளாதாரம் மிகவும் வளர்ச்சி அடைந்து உள்ளது என்பதை அறிந்தேன். உலக பொருளாதார வளர்ச்சியில் சீனா முதலிடம் பெற வாழ்த்துகின்றேன் என்கிறார் S.K.பாப்பம்பாளையம், P.T.சுரேஷ்குமார்.

1  2  3