• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-07-16 13:17:33    
காப்பி பிரியர்களுக்கு நற்செய்தி

cri
நீங்கள் காப்பி பிரியரா? ஒரு நாளைக்கு பல கோப்பை காப்பி அருந்துபவரா?

பரவாயில்லை. உங்கள் வாழ்நாளின் பிற்பகுதியில் நீரிழிவு நோய் ஏற்படாமல் உங்களால் தடுக்க முடியும், உடல் பருத்தவராக நீங்கள் இருந்தாலும், இது கைகூடும்.

அமெரிக்காவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இவ்வாறு முடிவுக்கு வந்துள்ளது.

ஹார்வர்டு பல்கலைக்கழகம், இந்த ஆய்வை மேற்கொண்டது. 125000 பேர், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

கேப்பீன் (CAFFEIN) இடம்பெற்ற காப்பியானது, உடலிலான உயிர்ப்பொருள் மாறுபாட்டுக்குச் சாதகமாக அமைவதாக, இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

நாள்தோறும், ஆறு கோப்பைக்கும் அதிகமாக காப்பி அருந்தும் ஆண்களுக்கு, அடுத்த 12 முதல் 18 ஆண்டுகளில், நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் 50 விழுக்காடு குறைந்து போகிறதாம்.

இதே அளவுக்கு அருந்திய மகளிர்க்கு, இந்த விழுக்காடு 30 ஆக இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.

இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஏற்படுவதைக் கேப்பீன் எவ்வாறு தடுக்கிறது என்பது பற்றி, ஆய்வாளருக்குத் தெளிவாகப் புரியவில்லை.

அமெரிக்காவில், ஒரு கோடியே 50 இலட்சம் பேர் நீரிழிவு நோய்க்கு ஆளாகியிருக்கின்றனர். அமெரிக்கரின் உயிரைப் பறிக்கும் நோய்களில் நீரிழிவு நோய்க்கு ஆறாவது இடம்.
1  2