• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-07-16 13:17:33    
காப்பி பிரியர்களுக்கு நற்செய்தி

cri

பொதுவாக, உடல்பருவம் அதிகமாக இருப்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது ஆகியவற்றுடன் தொடர்புடையது நீரிழிவு நோய். இது இதய நோய், மார்படைப்பு, கண்பார்வை இழப்பு, உடல்உறுப்பு இழப்பு, பிறவகை உடல் ஊனம் ஆகியவற்றுக்கு காரணமாக வாய்ப்புண்டு.

நீரிழிவு நோய் இருந்தால், உடலில் சுரக்கும் இன்சுலினை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளும் திறனை உடல் இழந்துவிடுகிறது.

சர்க்கரையை நமது உடல் கையாள்வதை கேப்பீன் பாதிக்கிறது என்று, அவ்வாய்வை மேற்கொண்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உயிர்ப்பொருள் மாறுபாட்டினை கேப்பீன் அதிகரிப்பதாகவும், அதன் பிற செயல்பாடுகளையும் பாதிப்பதாகவும் அவர்கள் கருதுகின்றனர்.

காப்பியில், குறிப்பிடத்தக்க அளவு பொட்டாசியம், நியாசின், மக்னீசியம், முதலானவை இடம் பெற்றுள்ளன. இவை, நீரிழிவு நோயின் வளர்ச்சிக்குச் சாதகமாக அமையலாம் என்று அவர்கள் கருதுகின்றனர்.

காப்பி பிரியர்கள், எதிர்காலத்தில் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்திலிருந்து தப்பித்துக்கொள்வதாக, ஹாலந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தெரிவித்தது.

அதன் முடிவுகளை, ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வு உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதனால், சகட்டு மேனிக்கு, காப்பியை அருந்துவது எனத் தீர்மானித்து விடாதீர்கள் நண்பர்களே.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷமாகும், இதில், காப்பி மட்டும் விதிவிலக்கா என்ன?

காப்பியா, நீரிழிவு நோயா-நீங்களே முடிவு செய்திடலாம்.


1  2