புதிய நிகழ்ச்சி நிரல் அனுப்புமாறு, பல நேயர்கள் கேட்டு கொண்டுள்ளனர். நன்றி! நேயர் எண் உள்ள நேயர்களுக்கு, எமது ஒலிபரப்பின் புதிய செய்தித்தாளை அனுப்பியுள்ளோம். விரைவில் கிடைக்கும் என நம்புகின்றோம்!
--தாங்கள் அனுப்பிய ஒலி எனும் இதழை, எங்களது கல்லூரி தகவல் பலகையில் இடம்பெறச்செய்து உள்ளேன். மாணவ மாணவியரிடம் கருத்து கேட்டேன். தமிழின் பெருமையை, பலமைல்களுக்கு அப்பால் உள்ள சீனாவில் இருந்து கூறுவது தான் பெருமை என்றனர். தமிழுக்காக பணியாற்றுகின்ற, சீன வானொலிக்கு நன்றி தெரிவித்தனர். இதழிலுள்ள சமையல் குறிப்பின் உதவியுடன் உருளை பச்சை மிளகாய் வறுவலை, செய்து பார்த்தேன். நன்றாகவே இருந்தது. ஒலி எனும் இதழ் பாரட்டக்குரிய வரவேற்கத்தக்க இதழ். தவிர, தாங்கள் அன்புடன் அனுப்பிவைத்த"சைன டுடே" இதழ் கிடைத்தது. பயன் மிக்க இதழ் அது. நன்றி!என்கிறார் பாண்டமங்கலம், எம்.தியாகராஜன்.
புத்தாண்டை முன்னிட்டு, சீன அரசு தலைவர், எமது வானொலி தலைமை இயக்குநர் ஆகியோர் வழங்கிய வாழ்த்துரையைக் கேட்ட பின், பல நேயர்கள் கருத்து தெரிவித்தனர்.
--சீன அரசு தலைவரின் வாழ்த்துரை மிகச் சிறப்பாக இருந்தது. ஒரு நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருந்தால் தான் மக்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும். எனவே தமது புத்தாண்டு வாழ்த்தில் 2004ல், வேலை வாய்ப்புகள் உருவாக்க இருக்கும் திட்டத்தைக் கூறி மக்களை மகிழச்சிபடுத்திய அரசு தலைவரை பெரிதும் பாராட்டுகின்றேன். சீன வானொலி தலைமை இயக்குனரின் வாழ்த்துரை, நட்பு சார்ந்த வகையில் இருந்தது. சீன வானொலி என்ற வேரில் பல நாடு என்ற கிளைகள் உலகம் முழுக்க நேயர்களாக வளர்ந்திருப்பதை அறிய முடிகிறது. உலக நேயர்களின் நட்புறவுக்கு சீன வானொலி பாலமாக இருப்பதை உணர்ந்து பாராட்டுகின்றேன் என்றார் ராமபாளையம், P.கண்ணன் சேகர்.
--சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் ஆகியவற்றுக்கு மதிப்பளிக்கும் வகையில், சமாதான சகவாழ்வை விரும்பும் வகையில் இவ்வாழ்த்து அமைந்திருந்தது. ஆசியாவின் ஒரு பெரிய நாடு உலகுக்கு முன் மாதிரியாக நடந்து வழிகாட்டுகிறது என்று எண்ணம் தான் தோன்றுகிறது என்றார் ஆரணி, பொன்.தங்கவேலன்.
1 2
|