• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-07-16 13:25:11    
நேயர்களின் கருத்துக்கள் 05

cri

இனி, பிற நிகழ்ச்சி குறித்த நேயர்களின் கருத்துகளை கேளுங்கள்.

--சீனாவில் வேளாண் துறையை வளர்ச்சி அடைய செய்வதின் மூலம் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. கிராம நாணயத்தின் சுழற்சியை வலுப்படுத்துவதின் மூலம் விவசாயிகள் வாழ்க்கையை முன்னேற்றி வலுப்படுத்த முடியும் என்பது உண்மை தான் என்கிறார் ராமபாளையம், வி.ரமணியம்மாள்.

--டிசம்பர் 26ம் நாள், மா-சே-துங்கின் 110வது பிறந்த நாளாகும். 20ம் நூற்றாண்டின் உலகின் உன்னத தலைவர் மாவோ. உலக மக்களின் ஒப்பற்ற வழிகாட்டி, சீன மக்களுக்கு விடுதலைப் பெற்று கொடுத்தது உலக அதிசயம் என்றே கூறலாம் என்றார் நாகர் கோவில், பிரின்ஸ் ராபர்ட் சிங்.

--சீன சமூக வாழ்வு நிகழ்ச்சி மூலம், வசந்த மக்கள் பணித்திட்டம் பற்றி விரிவாக, அறிய முடிந்தது. 1992ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக துவங்கிய இப்பணித்திட்டத்தின் முக்கியப்பணி வறியநிலையில் உள்ள பெண் குழந்தைகளின் கல்வி செலவுக்கு உதவித்தொகை வழங்குவதே!இப்பணித்திட்டத்திற்கு இரவு பகல் பாராமல் உழைத்து வருவோருக்கு, எங்களின் அன்பு சீன வானொலி நேயர் மன்றத்தின் பாராட்டுக்கள் என்கிறார் எஸ்.கே.பாப்பம் பாளையம், P.T.சுரேஷ்குமார்.

--செய்திகள், சீன நாட்டு நிலைமையை தெளிவாக உணர வைக்கின்றன. நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும் நேரத்தை, ஒரு மணி நேரமாக அதிகரிக்க வேண்டும் என்று, கேட்டுக்கொள்கின்றேன் என்கிறார் தோகை மலை நா.ஜெயபால்.

--இப்போது நிகழ்ச்சிகளின் தரம் மேம்பட்டுள்ளது. குறிப்பாக, செய்தித்தொகுப்பு மிகவும் அருமையாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. சீன கதை நிகழ்ச்சியும் இசை நிகழ்ச்சியும் மிகவும் அருமை என்கிறார் அபினிமங்கலம் கே.அருண்.


1  2