காலத்துக்கு ஏற்றது இது. கோடையில் இதமானது. எல்ளோரும் உண்ணக் கூடியது. பாராட்டுவதோடு நின்று விடாமல் வீட்டில் நாமே , ஜாம் ஜாம் என்று சுயமாகத் தயாரிப்பது நல்லது அல்லவா ? ஆமாம். அதற்காகத்தானே. இந்த நிகழ்ச்சி, முதலில் தேவையான பொருட்களைக் குறித்துக் கொள்ளுங்கள். ஆப்பிள் 1 கிலோ சர்க்கரை 500 கிராம் உப்பு சிறிதளவு எலுமிச்சை சாறு சிறிதளவு இதில் ஆப்பிள் மட்டும்தான் விலை உயர்ந்தது. கடை.யில் வாங்கும் ஜாமின் விலையை ஒப்பிட்டால் , இது சிக்கனமானது சரி, இப்போது செய்முறைக்கு வருவோம் , முதலில் ஆப்பிள்களை நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். தோலைச் சீவி விதைகளை அகற்ற வேண்டும். சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு அவற்றை மிக்சியில் போட்டு உப்பையும் பாதியளவு சர்க்கரையையும் கலந்து நன்றாக அரைக்க வேண்டும். நன்றாகச் சாறு வரும்வரை அரைக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆமாம். இப்போது அடுப்பின் மீது வாணலியை வைத்து லேசாகச் சூடாக்கி இந்தச் சாற்றை அதில் ஊற்றி கொதிக்க விட வேண்டும். வாணலி , காரம் படிந்ததாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியம். ஆமாம். இனிப்பான ஜாமுக்கு அது எதிரி அல்லவா? 1 2
|