• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-07-22 17:34:54    
நேயர்களின் கருத்துக்கள் 06

cri
சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியைக் கேட்ட பிறகு, பல நேயர்கள் சீன உணவைத் தயாரிக்கப் பழகி வருகின்றனர். சில நேயர்கள், இந்திய உணவு தயாரிப்பு பற்றி, தகவல் அனுப்பினர். மிக்க நன்றி.

--இந்நிகழ்ச்சியில், எளிமையான முறையில் மலிவான விலையில், மிகவும் சத்தான உணவு வகைகளை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வருகின்றீர்கள். எங்களுக்கும் இதன் தரம், சுவை மிகவும் பிடித்துள்ளதால் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகின்றோம். சீனாவில் பிரபலமாக இருந்து வரும் இனிப்பு, கார, பலகார உணவு வகைகளை ஒலிபரப்பினால், நல்லது என்று நம்புகின்றேன் என்கிறார் மின்னக்கல், இ.செல்வராஜ்.

--இந்நிகழ்ச்சியில் சீன உணவு தயாரிக்கத் தேவையான பொருட்களைக் கூறும் போது, நிறுத்தி வாசியுங்கள் என்று ஒரு நோயர் கோரிக்கை விடுக்கிறார்.

--சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில், காளான் பூக்கோசு வறுவல் தயாரிப்பது பற்றி கேட்டேன். எங்களின் பகுதியில் கிடைக்கும். குடைகாளான் கொண்டு செய்து பார்த்தோம். நானும் எனது குடும்பத்தினரும் ருசித்து, ரசித்து உண்டு மகிழ்ந்தோம். இப்பொழுதெல்லாம். சத்தான சீன உணவு வகைகளை, நாங்கள் அடிக்கடி சமைத்து, உண்ன முடிகிறது என்கிறார் மின்னக்கல், J.கலா.

அடுத்து, நல வாழ்வு நிகழ்ச்சிக்கான கருத்துக்கள்.

--மாசோதுங் அவர்களின் ஆயுள் இரகசியம் பற்றி கேட்டேன். உடற்பயிற்சி, நடப்பது மற்றும் வேலை நேரத்தில் நடப்பது, நடனமாடுவது போன்றவை அவருக்கு பிடிக்கும் என அறிய முடிந்தது என்கிறார் ராமபாளையம், S.பாரதி.

--காலை பகல் இரவு உணவுடன், காய்கறி, சீன சூப் உண்ணும் பழக்கம் ஜப்பானியரிடம் உள்ளதைக் கேட்க வியப்பாக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பே, இங்கு 4 நாள் முகாமில் இயற்கை வாழ்வியல் பயிற்சியை 50 பேருக்கு அளித்துள்ளேன். சோயா சூப், காளான் சூப் முதலியவை பற்றி, நீங்கள் விளக்கியதைக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது என்கிறார் ஆரணி, பொன்.தங்கவேலன்.

எமது தமிழ்ப்பிரிவின் இணையதளத்தை அதிகமான நேயர்கள், பார்வையிட்டு வருகின்றனர். நாள்தோறும் பல மின்னஞ்சல் கடிதங்கள் வருகின்றன.

--விண்டோஸ் எக்ஸ் பி பொருத்தப்பட்ட கனிணியில் மட்டும் தமிழ்ப்பிரிவின் இணையதளம் மிகவும் தெளிவாகவும் நன்றாகவும் பார்க்க முடிகிறது என்று பலர் தெரிவிக்கின்றனர்.

புதியென் நகர் பற்றிய பொது அறிவு போட்டிக்கான 5 கட்டுரைகள் கடந்த வாரத்தில் ஒலிபரப்பாயின. வளவனூர் புதுபாளையம் எஸ்.செல்வம், பேளுக்குறிச்சி கே.செந்தில் ஆகியோர், மின்னஞ்சல் மூலம், உடனடியாக விடைத்தாள்களை அனுப்பியுள்ளனர். பாராட்டுக்கள்.

1  2